அழிவை நோக்கி மனிதன்

சிரழிந்து போகும் மனிதனே !, சிந்தனை செய்ய மறவாதே, நிந்தனையுடன் வாழ்வை கழிக்காதே ! ஏனெனில் நாளை மண்ணோடு மண்ணாகி போகும் மனிதனாக நீயிருக்கிறாய் !

ஆதமின் மகனே ! உலக சுகங்களில் ஆழ்ந்து கிடக்காதே ஏனெனில் உலகம் ஒருநாள் அழியும் என்பதை மறக்காதே ! வீணாக வீம்புடன் வாழ்வை வாழாதே !

மனிதனே ! பேசுவதெல்லாம் இனிமை, நடப்பதெல்லாம் தன்மை, விரும்புவதெல்லாம் தனிமை, என்பதெல்லாம் உண்மை என்று வாழ்வதெல்லாம் நன்மை என்பதை மறவாதே !

மனிதனே ! சரித்திரம் படைத்த மனிதனாக வாழ்வதை விட பிற மனிதர்களுக்கு முடியுமான உதவிகளை முழுமனசுடன் செய்யும் மனிதனாக வாழ்வதே இம்மையிலும், மறுமையிலும் சிறந்தது.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (2-Sep-16, 10:59 pm)
பார்வை : 119

மேலே