தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 62 = 207
“தேடாதே தேடாதே என்மனம் வேறு ஆணை தேடாதே.....!
பாக்காதே பாக்காதே என்விழி வேறு பெண்ணை பாக்காதே...!
அந்திமாலை சுபவேளை மெல்ல விரகம் சூழும்
அதிகாலை மடிசேலை அதன் ரேகை சொல்லும்
உன் வாழ்வை நாடி எனை தந்தேன் கோடி
இந்த மாது செய்த சூது நீ என் மடியில் பாரு”
சந்திரனை கண்டுகொண்டே சரசங்கள் பயிலலாம்
சூரியனை வேண்டிக்கொண்டால் சுகமோடு வாழலாம்
காதல் கணை வீசும்போது கண்கள் கண்டபடி மேயுதே
காம தீபம் ஏற்றும்போது இதழ் கனிரசம் பருகுதே
வாழ்வாங்கு வாழ்வதற்கு வாழ்த்துக்கள் பாடுவேன்
வாலிபம் காண்பதற்கு வஞ்சிவுன்னில் கூடுவேன்
மலராலே பூஜைசெய்து மனதார வரவேற்கிறேன்
மணியான பொன்முகத்தில் முத்தமழை பொழிகிறேன்
மெளன ராகம் உருவாகி இதழோடு இதழ் கூடி
விளையாடும் நேரம் இது விடியலே விலகி ஓடு !
என்னாசை தீரும்போது எனக்கேதும் கவலை இல்லை
உன்னாசை தீர்ப்பதே எனக்கிங்கு தினம் வேலை !
பொன்னாசைதான் பெண்ணாசையாம் - ஆனால்
உன்னாசையோ என்னாசையாம் !
மண்ணாசை மறந்தாலும்
பெண்ணாசை மறப்பதில்லை..!