கன்னியும் கற்பும் காம்பில்லா பூவில்

காம்பில்லாத பூவாய்
கடவுள் என்னை படைத்தானே
கால் கொடுத்துதான் நடக்க முடியாமல்
கன்னி என்னை முடக்கி வைத்தானே

தண்ணீர்க்குடம் இடுப்பில் தூக்க
தனிமையில் பல நேரம் ஆசைவச்சேன்
தாவணி சுற்றி கட்டி வைச்ச
தவளை போலவே நான் துடிச்சு வைச்சேன்

நாறோடு சேரும் பூ கூட
நல்லாத்தான் மணக்க வைக்கும் நாறினைதான்
குடும்பத்தோடு நான் பிறந்த நேரமோ என்னவோ
குறைபட்டு கலங்கிதான் போகுது உறவு

பஞ்சு மிட்டாய் ஓடி சென்று நான் வாங்க நினைக்கிறேன்
பட்டாம்பூச்சி போல நானும் பறக்கதான் நினைக்கிறேன்
கால் முளைச்ச முள்ளுதான் கண்ணீரில் வாழ்கிறேன்
கண்டவங்க சொல்லு எல்லாம் தாழ்வு மனபான்மைக்குதானோ

நொண்டியென்றால் நூறு கிறுக்கம்
நொடிக்கு நொடி கேலிகளில்
எத்துனை கவிதைகள் கிறுக்கி வைத்தேன்
எல்லாம் அடுப்பெரியும் சாம்பலில் அடக்கி வைச்சேன்

பதினெட்டு வயது வருகையில்
பருவத்தின் சேட்டைகள் தொடர்கையில்
காதலில் நன் விழுந்து மாய்வேனோ
காதலனாக யார் வருவாரோ ?

தோளோடு தூக்கித்தான் அவன் சென்றால்
துன்பங்கள் வாறது என் வாழ்நாளில்
நிலவோடு கால்நடையாய் சென்றுதான்
நீண்ட காலம் சொர்க்கத்தில் நான் இருக்கலாம்

கனவுகள் மட்டுமே வாழ்க்கையில்
கால் கொடுத்து உதவுது நடக்கவே
நினைவுகள் மட்டுமோ ஏன்தானோ?
நெஞ்சினில் ஏக்கத்தில் இருக்குது

பிறவிக்கும் பிறவிக்கும் இது வருமோ ?
பெதைணன் இறக்கலாம் என்றபோது
உதவிக்கு வருகின்ற தற்கொலையெண்ணம்
உதறி விடுகிறது நான் என்ன செய்ய ?

கன்னிக்கும் முதுமைக்கும் காயமாய்
கண்ணுக்கும் என்றுமே கண்ணீராய்
இடுப்புக்கு கீழ் இருப்பது வாழைதொடையென்றால்
ஏனோ அது வெட்டினால் துளிர்விடுமோ ?

எழுதியவர் : . ' .கவி (28-Jun-11, 9:33 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 349

மேலே