கார்ப்பரேட் திருடர்களிடம் எஸ்கேப் ஆகி, இயற்கை திருடர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்
மெடிமிக்ஸ், ஹமாம், ஆம்வே சோப்பு, சமீபத்தில் வந்த பாபா ராம்தேவின் பதாஞ்சலி சோப்பு, எல்லாமே டுபாக்கூர் தான்!
இதை சொல்லி நான் உங்களுக்கு புது அயிட்டத்தை அறிமுக படுத்த போவது கிடையாது. பொதுவாகவே இந்த காஸ்மட்டிக் விவகாரங்களில் ஆர்வமாக இருப்பவர்கள், நிறைய பொருளை பயன் படுத்தி விட்டு ஓரிரு பிராண்ட் களை இது தான் சூப்பர் என சொல்வார்கள், அதை பயன் படுத்தி, நல்ல ரிசல்ட் வந்தால், அதை அடுத்தவருக்கும் பரிந்துரை செய்வார்கள்.
உண்மையில் அதன் பின்னணி காரணம், உடலின் மீது அதிக அக்கறை கொண்டு, அதற்காக சில ஆய்வுகளை எல்லாம் செய்து, நிறைய பொருட்களை பயன் படுத்தி, தேடி சென்று வாங்கி என, அந்த அளவுக்கு ஒருவர் மெனக்கிடுகிறார் என்றால் அவருக்கு அவர் உடல் மீது கொஞ்சம் கூடுதல் அக்கறை இருக்கிறது என்று அர்த்தம், அந்த அக்கறை மட்டுமே போதும், அவர் நம்பும் அந்த காஸ்மட்டிக் இல்லாமலேயே அந்த ரிசல்ட்டை அவர் கொண்டு வரலாம்.
உதாரணத்துக்கு சோப்பு, உங்களுக்கு பிடிச்ச சோப்போ, facewash , ஏதோ ஒன்று இருக்கு வைத்துக் கொள்ளுங்கள். நான் முன் சொன்னது போல எல்லா சோப்புமே டுபாக்கூர் என்றாலும், இன்றைய தேதியில் காற்றில் கலந்துள்ள மாசு, முக்கியமாக நகர வாழ்க்கையின் தூசியில் ஏதோ ஒரு சோப்பு கண்டிப்பாக அவசியம், அதை வைத்து ஒரே தடவ முகத்தை கழுவினால் போதும், சில பேர் முகத்தை பளீரென்று ஆக்க இரண்டு மூன்று முறை சோப்பு போட்டு பார்த்திருக்கிறேன், உண்மையில் நீங்கள் நேரம் எடுத்து கழுவ வேண்டியது கைகளை தான், முகத்தை அல்ல. ஆக எவ்வளவு கழுவினாலும் நமக்கு இருக்கிற முகரை தான் இருக்கும், அதை ஒரு முறை கழுவி விடுவதிலையே அடைந்து விடலாம், மத்தபடி தேவையான தண்ணீர் குடித்து, தேவையான தூக்கம் தூங்கி எழுத்தாலே முகம் மலர்ச்சியாகிடும், இது இரண்டு தான் முக்கியம்!
உங்க சோப்பால் நீங்க ஒரு சதவிகிதம் கூட கூடுதல் மலர்ச்சியாகி விட போவது இல்லை! ஆனால் சோப்பால் நீங்கள் உலக மகா அழகன், அழகி எல்லாம் ஆக முடியாது, மத்த பிராண்டுகளை குறை சொல்லி, மார்க்கெட்டுக்கு புதிதாக களம் இறங்கி இருக்கிற பதாஞ்சலியும் சேர்த்து தான்.
கடந்த இரண்டு வருடத்தில் மட்டும், பாபா ராம்தேவின் பதாஞ்சலி விளம்பரங்களும், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் இமாலய வளர்ச்சி, கருப்பாய் இருப்பது அவமானம் என்பதை எப்படி fair and lovely என்கிற ஒரு வர்த்தக விளம்பரம் சமூக உளவியல் சிக்கலை உருவாக்கியதோ, அதே மாதிரி காவி அரசும் தன் அஜெண்டாவுக்காக, பாபா ராம்தேவை வளர்த்து விட்டு அழகு பார்க்கிறார்கள். அதற்கு பின்னணியில் காரணங்கள் இல்லாமல் இல்லை! ஒரு காஸ்மட்டிக் விடமால் அனைத்தையும் யோகா, இயற்கை, பரிசுத்தம் என்றெல்லாம் வியாபார படுத்தும் போது, அதை வாங்குபவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன்,
எந்த நல்ல மருத்துவரும், நல்ல ஆலோசகரும், அட்றாஸிட்டி இல்லாமல், ஓவரா அலட்டிக் கொள்ளாமல், உடலை இயற்கையாக அணுகுபவர்கள், எந்த காஸ்மட்டிக்கும் உங்களுக்கு பரிந்துரை செய்ய மாட்டார்கள், அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று தான் சொல்வார்கள்!
கார்ப்பரேட் திருடர்களிடம் எஸ்கேப் ஆகி, இயற்கை திருடர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர், பட்ஜெட்டுக்கு கடிக்காம எதையாவது வாங்கிட்டு போங்க!