4G காதல்
அன்பே...
வானவில்லை வட்டமாக்கி
உனக்கு பொட்டு வைக்கவா...
செவ்வான சிவப்பெடுத்து
மருதாணி பூசவா...
உன் மலர் பாதம் இரண்டையும்
என் நெஞ்ஞோடு தாங்கவா...
ரவிவர்மன் தூரிகை
எடுத்து உன் பெயர் எழுதவா...
உன் பெயருக்கு பின்னால்
என் பெயர் சேர்க்கவா...
என் விழி வழியாய் உனக்கு
மின் அஞ்சல் அனுப்பவா...
அதன் பதிலுக்காக
நான் காலகாலமாய் காத்திருக்கவா..
உனை பார்த்த நாளை
என் பிறந்தநாளாய் மாற்றவா...
உன் தோளோடு தோள் சேர
கடவுளை கேட்கவா...
என்ன செய்ய வேண்டும்
சொல் அன்பே
நான் எதையும் தாங்குவேன்
உன் அன்புக்காக....