மொழியாக அவள்

வாசம்
அவள்
கூந்தலின்
மொழி...

மௌனம்
அவள்
விழியின்
மொழி...

காந்தம்
அவள்
பார்வையின்
மொழி...

புன்னகை
அவள்
இதழின்
மொழி...

நாணம்
அவள்
கன்னத்தின்
மொழி...

அழகு
அவள்
தேகத்தின்
மொழி...

மின்னல்
அவள்
இடையின்
மொழி...

நலினம்
அவள்
நடையின்
மொழி...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (30-Aug-16, 11:08 pm)
Tanglish : mozhiyaga aval
பார்வை : 132

சிறந்த கவிதைகள்

மேலே