வேண்டும் வரம் தந்துவிடு

வேண்டும் வரம் தந்துவிடு

இரு விழி பார்வையிலே
என் இதயம் பறித்தவளே
கரு கரு கண்களால்
என் மனம் கவர்ந்தே
சென்றாயடி....

சில்லறை சிரிப்பாலே
என் இதயம் பிளந்தவளே
சிதறி போய் கிடக்கிறேன்
எனை கோர்த்திட நீயும்
வருவாயடி....

உன் கூந்தலில் நானும்
கலந்திடவா
உன்னுடன் சேர்ந்தே
நானும் பறந்திடவா....

மைவிழியால் என்னை
மயக்கிவிட்டாய்
வில் வளைவில்
என்னை
சிறைப்படுத்திவிட்டாய்...

உன் கழுத்தினில்
மாலையாகிடவா
உன் மடியினில்
தவழ்ந்திடும் மழலையாய்
நானும் மாறிடவா....

உனக்குள் என்னை
தொலைத்திடவா
உனக்கொரு தாயாய்
நானும் மாறிடவா....

பதில் கூறடி
எந்தன் கண்மணியே
நீ உதிர்க்கும்
வார்த்தையிலே
என் வாழ்வும்
இங்கே உள்ளதடி.....

என்னை காண்கையில்
வெட்கம் கொண்டுவிடு
அந்த நாணத்திலே
மீண்டும் ஒரு முறை
உனக்காய் நானும்
பிறப்பேனடி......!!

எழுதியவர் : அன்புடன் சகி (31-Aug-16, 5:20 am)
பார்வை : 442

மேலே