ஆனந்த நினைவது

நான் எழுதிய முதல் கவிதை
அவள் கால்கள் மண் மீது கிறுக்கியது ....

நான் தேடிய முதல் செல்வம்
அவள் கைகள் குறிப்பேட்டில்
எழுதியது ....

நான் அடைந்த முதல் மகிழ்ச்சி
அவள் விழிகள் என் மீது காதல்
வீசியது.....

நான் நடந்த முதல் அழகான
பாதை அவள் வீடு தேடி
சென்றது ....

நான் ரசித்த முதல் ஒவியம்
அவள் புகைப்படம்
ஒன்றது ....

நான் அடைந்த முதல் வரம்
அவள் பெயர் உச்சரிக்கும்
தருணமது ....

நான் மகிழ்ந்த முதல் நாள்
அவள் முன் அறிமுகம்
செய்தது .....

நான் கடந்த முதல் பயணம்
அவள் எனை கடந்த
நிமிடமது .....

நான் சுவைத்த முதல் அமுதம்
அவள் கையால் கொடுத்த
பிறந்த நாள் இனிப்பது ....

நான் அடைந்த முதல் புதையல்
எனக்குள் ஒளிந்திருக்கும்
அவளின் ஆனந்த நினைவது ....

எழுதியவர் : கிரிஜா.தி (30-Aug-16, 10:25 pm)
Tanglish : aanantha ninaivathu
பார்வை : 78

மேலே