மலடி
கருவில் சுமக்க முடியாவிடினும் - தினமும் சுமக்கிறால் மனதில்
தாய் என்ற பட்டம் இல்லாவிடினும்
காணும் மழலையெல்லாம் சொந்த சேயாய் உணர்கிறாள் ..
முலை பால் தன்னில் சுரக்கா விடினும்
சிறு சிரிப்பால் மழலையை கொஞ்சிடுவாள்
யார் சொன்னது அவள் மலடி என்று
அவள் மனதால் இன்னும் சிறு மலரடி ...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
