நிழலும் நிஜமும் நீயாக இருக்கிறாய்

கற்பனை வரிகள் தவறாக நினைக்க வேண்டாம் எழுத்தாளரின் எண்ணங்கள் மிகவும் வித்தியாசமானது என்பதை மறந்து விடாதீர்கள்.

மலரின் வாசம் உணரும் நேரம் அழைக்கும் காதல் துணைக்கு மோகம் உழைக்கும் பணம் அதை கொண்டு நினைக்கும் நேசம் உன்மீது புரியாத பாசம் அதை உணராதது உன் வழக்கம்.

நினைவாக நானிருக்கிறேன் கனவாக நீ வருகிறாய் ! நிழலாக நான் வருகிறேன் நிஜமாக நீ இருக்கிறாய் ! அன்பான நேரம் உனக்கும் எனக்கும் அழைப்பிதில் தருகிறது மோகம்.

பெண்ணே ! உன்னை காணும் நேரம் கண்கள் சொல்லும் காதல் காலத்தை கடந்தும் உன்மீது நேசத்தை எனக்கு ஏற்படுத்தி விட்டதை உன்னால் ஒருபோதும் அறிந்துகொள்ள முடியாது

நாட்களாக நீயும் மாதமாக நானும் எம் காதலாக வருடமும் உலகில் என்றென்றும் வரவேண்டும் என்ற எண்ணம் உனக்கும் எனக்கும் உள்ளத்தில் மலரவேண்டும் என்பதே என் நோக்கம்.

ஒருகாலம் வரும் நீயும் நானும் சேரும் நேரம் அமையும் என்ற நம்பிக்கையில் உன் வருகைக்காக நான் என்றும் காத்திருப்பேன் ஒருநாள் உனக்கு என் காதலின் மகிமை உணரும்.

எழுதியவர் : அப்துல் ஹமீட் (31-Aug-16, 10:05 pm)
பார்வை : 99

மேலே