எது நாகரீகம்
சுவர் நான்கு
இல்லாத காலத்தில்
இருந்து வந்த நாகரீகம்...
இன்று - ஏனோ?
இங்கு இல்லை...!
ஒழிமறைவாய்...
நடந்த செயல்கள் யாவும்...
பொது இடத்தில் நடப்பதுதான் -நாகரீகமா?
ஆதிவாசி புலம்பெயர்ந்து
இன்று வாழ்கிறான்
நரகம் எனும் நகரத்தில்...!