வேண்டுமே சுதந்திரம்

அன்னியனிடம் விடுபட்டு ஆணிடம் அடைபட்டோம்.
உடைபடாத அடிமைச்சங்கிலியில்
ஆங்காங்கே பலர் சிறைபட்டோம்.
விண்ணில் விளையாடும் சில பெண்களின் மத்தியில்
கண்ணில் நீரை மறைத்து, கனவுகளின் வேரை அறுத்து
படித்தபல பெண்களும் நடித்து வாழ்கின்றார்.
ஆண்களை எதிர்த்திடாமல் எந்திரமாய் இருக்கனும்.
மதிபோல மௌனமாய் அவன் பேச கேட்கனும்.
பணம் எடுக்கும் அட்டையை அவனிடம் கொடுக்கனும்.
மனம் இல்லா அவனோடு அட்டைபோல ஒட்டனும்.
தாலிஎன்னும் வேலியை தான்டாத பலர்.
போலியாக வாழ்கின்ற வாசமில்லா மலர்.
சாத்திரத்தின் சூத்திரத்தை
சொல்லியே எம் இனத்தை ,
கரை போல கறை ஆகி ஆட்டுவிக்கும் ஆண் இங்கே..
சவம் என எண்ணாமல் சமமாக எண்ணியே
மிண்ணிடும் தங்கமான சிங்கங்கள் ஆங்காங்கே.
எங்களுக்கு ஊண்றுகோளும் வேண்டாம்.
தூண்டுகோளும் வேண்டாம்.
வலிமட்டும் தராமல் ,கதிரவனை மறைத்த
காரிருளே வழிவிடுங்கள்.
சுதந்திரகாற்றை சுவாசித்து, எங்கள்
வெற்றியின் விலாசத்தை தேடுகிறோம்..

எழுதியவர் : கு.தமயந்தி (31-Aug-16, 10:56 pm)
பார்வை : 82

மேலே