எந்தன் மனம்
உன்னிடம்
காதலை
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாற்றங்களையே
வடுக்களாய் சுமக்கிறது
எந்தன் மனம்!..
இருந்தும் நானோ
உன் விழியருகே
வழி நடந்து
கானல் நீராய்
வந்து வந்து
போகும் காதல்
கனவுகளுடன்
வாழ்கிறேன்!...
மாறுகின்ற உலகிலே
மாறிவரும் நிழலாகவேனும்
இறைவன் நம்மக்குப்போட்ட
பந்தத்தின் கயிறுகள்
உருமாறி நிலையான
ஓவியமாகுமென்கிறது
எந்தன் மனம்!.