உன் தன்னலமற்ற அன்பினால் ,,,,
உன் பசி மறைத்து, என் பசியற்றினாய்
என் சந்தோஷத்தில் நீ சந்தோசம் அடைந்தாய்
என்னகொன்று என்றால்,நீ துடித்துப்போவாய்
எதுக்கு அம்மா உனக்கு என் மீது இவ்வளோ பாசம்.,
உனக்கு நான் என்ன செய்தேனென்று என்மீது இன்னும் அன்பு கொண்டிருக்கிறாய் .
விளையாட்டுக்கு கூட நீ என்மீது கோபம் கொண்டதில்லை
உன் அன்பால் என்னை வழிநடத்தினாய்,உன் பாசத்தால் பசியற்றினாய்.
எனக்கு நீ இமையாக இருந்தும் ,நான் உனக்கு சுமையாக தெரியவில்லை .,
எனக்கு காய்ச்சல் வந்தது உனக்கு தெரிந்தால்
இரவு முழுவதும் தூங்க மாட்டாய் என்று மறைத்தும் ,உனக்கு தெரிந்து போகும் என் முகத்தைப்பார்த்து ,அப்பொழுது நீ என்மீது காட்டும்
அன்பை பார்த்து காய்ச்சல் தொடர்ந்தால் என்னவென்றுத்தோணும் எனக்கு .,
நான் எங்காவது வெளியில் சென்று தாமதமாகினால்.,அதுவரை நீ நரகத்தை அனுபவித்து கொண்டிருப்பாய் .,
நீ இருக்கும்போது இறைவன் எதற்கு ,நீ இருப்பதினால் துன்பமில்லை எனக்கு ,,,,,
மறுபடியும் கேட்கிறேன் ????எதுக்கு அம்மா உனக்கு என் மீது இவ்வளோ பாசம்.,
அதுசரி ,நான் யாரேன்றுத்தெரியாமலே,என்னை பத்துமாதம் சுமந்தாயே ....என்னை புரிந்தப்பிறகும் என்னை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறாயே...,,,இதற்கு ஈடு என்ன செய்ய முடியும் என்னால்
காலங்கள் மாறினாலும் .,பல மாற்றங்கள் நிகழ்ந்தாலும் .,உன் அன்பு மாறாது அம்மா .,எனால்
மாறுவதற்கு நீ என்ன மனிதப்பிறவியா .,
உன் பாதங்கள் தொடும்போது தெரியும் நீ எனக்காக நடந்த தூரம் எவளவென்று.,
மருஜென்மதிலும் நீயே என் தாயாக வேண்டும்.,அப்படி நடக்குமானால் இப்போதே இறப்பதிற்கு கூட தயாராக இருக்கிறேன் .,உன் தாலாட்டை கேட்க.,,
உன் அன்பை ஈடு செய்ய என்ன இருக்கிறது என்னிடம் உன் அன்பை தவிர.,