கைகூடும் அதிகமே
கையில் தடியுடன்
இடுப்பில் ஒரு முழத்
துண்டுடன் இருந்தவனை
மகாத்மா என்கின்றனர்.
திருவோட்டுடன்
நீள அங்கியுடன்
அலைந்தவனை
புத்தன் என்று அழைக்கின்றனர்.
மாட்டுக் கொட்டிலில்
ஆடு மேய்ப்பவனுக்குப்
பிறந்தவனே
யேசுநாதர் என்பார்.
வெளித் தோற்றம்
ஓரளவே
உள்ளார்ந்த எண்ணமே
கைகூடும் அதிகமே