பணம்
பலூன் மனதிற்குள்
ஆசையை காற்றாக
ஊதுகிறோம்,
பணம் எனும் உயரத்தை
அது அடைய.!
அடைந்தால் சுகம்,
இல்லை மன பலூன்
சூம்பி விடும் அல்லது
வெடித்து விடும்.
பணம் ஒரு கருவி தான்,
பட்டம் அல்லது பதவியை அடைய.
ஆஸ்தி அல்லது அந்தஸ்து என்பதெல்லாம்
யாரும் எளிதில் தொட முடியாத உச்சம் தான்.
அந்த உச்சத்தில் இருப்பவர்கள்,
ஒவ்வொருவர் பார்வையிலும்
ஏற்றம் இறக்கம் இருக்குமே தவிர
வேறெதுவும் இல்லை -
பணத்தை அடையும் உயரம்
உச்சம் இல்லை, பாதாளம்.
அடைய முடியாததால் மட்டுமல்ல,
விரும்ப முடியாதது.
அதில் சாதனையை விட வேதனையே அதிகம்.
பணம் இனிக்கும் தேன் தான்.
அளவுக்கு மீறினால் திகட்டும்.
சின்ன சின்ன காயங்களுக்கு
அளவோடு இருந்தால் மருந்து,
அளவுக்கு மீறினால் விருந்தாகலாம்,
அது ஒரு நாள் ஒரே நாளைக்கு தான்.
தினம் தினம் விருந்தானால்
விருந்து சுவைக்குமா?
பணம் தேவை தான்
ஆசையின் அளவுக்கு.
ஆசையின் அளவை சுருக்கினால்
பணம் என்றுமே உபரி தான்..!