என் ஒரு நாள்
என்றென்றும் உன்னுடன் என் ஒரு நாள்!!
இரவில் நிலவு காய்ந்து நம்மை தாலாட்ட,
பகலில் சூரியன் நம் துயில் தட்ட,ஒரு காதல் முத்தமுடன் தொடங்கும் உன்னுடன் என் ஒருநாள்.
குழந்தை போல் என்னை பாவித்து குறும்புகள் பல நீ செய்து,
ஒன்றாய் உணவுண்டு உனக்கு அரைமனதாய் விடை கொடுப்பேன் நீ அலுவலகம் செல்ல.
இங்கு நான் அங்கு நீ என்று கழியும் மணித்துளிகள்.
உன்னை அந்தியில் பார்க்க ஆவல் கொள்ளும் என் இரு விழிகள்.
அவ்விழிகளுக்கு விருந்து சேர்க்கும் உன் வரவு.
வந்துவிட்டார் என்னவர்!! என் கண்களில் காதல் பெருக உன்னை காணும் அந்த நேரம் என் பொக்கிஷம்!!
இரவு உணவில் இளைப்பாறி, காதல் மொழிகளுடன் கண் அயர,
என் ஒரு நாள் கழிந்தது உன்னுடன் என் அன்பே!!