தவமிருந்து வரம் பெற்றேன்

தவமிருந்து வரம் பெற்றேன்

பத்து வருடங்கள்
உனக்காய்
தவமிருந்தேனடா
மலடி என்ற
சொல் தாங்கியே
உனக்காய் நானும்
காத்திருந்தேனடா.....

எனக்குள் கருவாய்
வந்துதித்தே
எனையும் தாயாய்
உணரவைத்தாயடா...

வரமாக நான்
பெற்ற மகனே
உன்னை
என் தோளில்
நானும் சுமந்தே
காடு மலைகள்
கடந்தே செல்வேனடா...

உன் வேதனைகள்
நானும் தாங்கியே
உன் முகத்தினில்
புன்னகையை
மலரச்செய்வேனடா...

காலமெல்லாம்
உனை என்
நெஞ்சினில் சுமந்தே
என் உயிரை நானும்
துறப்பேனடா.....!!

எழுதியவர் : அன்புடன் சகி (3-Sep-16, 4:15 pm)
பார்வை : 324

மேலே