உன் தாய்மடி ஒன்றே போதுமடி
உன் தாய்மடி ஒன்றே போதுமடி
இனிய கீதங்கள்
தேவையில்லை
உன் தாலாட்டு
ஒன்றே எனக்கு
போதுமடி.....
பொன்னூஞ்சல்
தேவையில்லை
உன் சேலை
முந்தானை
எனக்கு
போதுமடி....
மாடி வீடுகள்
தேவையில்லை
வாடைக்காற்று
வீசிடும்
வயலோரங்கள்
எனக்கு
போதுமடி....
பஞ்சு மெத்தைகள்
தேவையில்லை
உன் மடியினில்
தவழ்ந்திடும்
சுகமொன்றே
எனக்கு
போதுமடி....
சொர்க்கங்கள்
தேவையில்லை
உன் சேயாய்
வாழ்ந்திடும்
வரமொன்றே
எனக்கு
போதுமடி......!!