அழகே -என் மகனே
உன் பொக்கை வாய் சிரிப்பில்
பூக்கள் மலர்வதை உணர்கிறேன்,
நீ அம்மா என்னும் மழலை மொழியில்
அகிலத்தை வென்று விட்டதாய் தலை கணக்கிறேன்,
உன் நான்கு கால் நடையில்
நாட்டியத்தின் புது அகராதியை காண்கிறேன்,
நடுநடுவே நீ அழுகையில்
நாடி நரம்பெல்லாம் துடிக்கிறேன்,
நான் என்ற சொல் மறந்தே போனேன்
நீயே உலகம் ஆகிவிட்டதால் ..