ஸ்வாமிசரணம் மாலதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்வாமிசரணம் மாலதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  17-Dec-1987
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Aug-2016
பார்த்தவர்கள்:  176
புள்ளி:  19

என் படைப்புகள்
ஸ்வாமிசரணம் மாலதி செய்திகள்
ஸ்வாமிசரணம் மாலதி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2016 12:24 pm

உன் ஒருவனை மட்டும்
நிமிடத்திற்கு ஒருமுறை
காதல் செய்கிறேன் ,

உன் நிமிர்ந்த நடையிலும் ,
நேர் பார்வையிலும் ,
நிசப்தமான புன்னகையில்,
தலை சாய்த்து
என்னை காணும் அழகிலும்,
தவிக்கும் என் நெஞ்சத்திற்கு
பதில் சொல்லும் உன் கண்களும் ,

நினைவாக நிமிடங்களில் வந்தவனே ,
என் கனவில் என்றும் நின்றவனே,

கணவனாக வராமல் சென்றவனே ,
காற்றாய் மாறிவிட்டாய் -என் இதய கோயிலில்
ஒளியாகவும் ,ஒலியாகவும் வீற்றுவிட்டாய் ,

நிமிடத்திற்கு ஒரு முறை
உன்னை உணர்கிறேன் -என் காதலே,

உன்னை இறைவனாக தொழுகிறேன் ..

மேலும்

மனிதனை இறைவன் என்ற சொல்லால் ஒப்பிடக் கூடாது 02-Sep-2016 5:53 pm
ஸ்வாமிசரணம் மாலதி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2016 10:46 am

நீ குப்பைகளை போடுவதால் தான்
அது சாக்கடை இல்லையெனில்

அதுவும் தெளிந்த நீரோடைதான்
மனதின் குப்பைகளை
கலைந்து விட்டால்
நீயும் தெளிந்த நீரோடைதான்

அனைத்து வழிகளும்
உனக்காக திறந்திருக்கும் ...

மேலும்

அன்பின் கதவுகள் தட்டப்படாமல் திறக்கப்படுகிறது 02-Sep-2016 10:49 am
ஸ்வாமிசரணம் மாலதி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2016 10:38 am

உண்மையான உறவு
பொய்யான உறவு
இரண்டுக்கும் அதிகம் வேறுபாடு இல்லை

உணர்ந்தவனுக்கு உறவெலாம் மாயை
உணராதவனுக்கு உறவெலாம் சொர்கமாய்

கண்மூடி உண்மையானவனை தேடு -இவுலகில்
நீ கூட உனக்கு உண்மையாய் இல்லையென்று புரியும் ...

மேலும்

நல்ல கவிதை. 28-Sep-2016 6:41 am
உண்மைதான்..எல்லாம் புரிதலில் தான் தங்கியிருக்கிறது 02-Sep-2016 10:48 am
ஸ்வாமிசரணம் மாலதி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2016 10:30 am

உன் பொக்கை வாய் சிரிப்பில்
பூக்கள் மலர்வதை உணர்கிறேன்,

நீ அம்மா என்னும் மழலை மொழியில்
அகிலத்தை வென்று விட்டதாய் தலை கணக்கிறேன்,

உன் நான்கு கால் நடையில்
நாட்டியத்தின் புது அகராதியை காண்கிறேன்,

நடுநடுவே நீ அழுகையில்
நாடி நரம்பெல்லாம் துடிக்கிறேன்,

நான் என்ற சொல் மறந்தே போனேன்
நீயே உலகம் ஆகிவிட்டதால் ..

மேலும்

அன்பில் நெஞ்சம் மலர்கிறது 02-Sep-2016 10:39 am
ஸ்வாமிசரணம் மாலதி - ஸ்வாமிசரணம் மாலதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2016 8:17 pm

தாயக நான் மாற
தரித்தாயோ -கண்ணுறங்கு ,

என் தவத்தால் எனக்கு
கிடைத்தாயோ -கண்ணுறங்கு ,

இரண்டாம் மாதம்
இலையுதிர் காலமாய்
இளைத்தேனே- கண்ணுறங்கு,

முன்றாம் மாதத்தில்
முழுநிலவாய் என் முகம்
முத்தே நீ சிரித்தாயோ -கண்ணுறங்கு ,

நான்காம் மாதம்
நகர்ந்தாயோ நந்தவனமே -கண்ணுறங்கு ,

ஐந்தாம் மாதம்
ஆராரோ நான் பாட
நீ கேட்டாயோ -கண்ணுறங்கு ,

ஆறாம் மாதம்
அரும்பே நீ குறும்பு
செய்தாயோ -கண்ணுறங்கு ,

ஏழாம் மாதம்
எண்ணில் பெரிய
மாற்றம் கண்டேன் -கண்ணுறங்கு ,

எட்டாம் மாதம்
அடி வைக்கை

மேலும்

நன்றி செல்வமுத்து அவர்களே 01-Sep-2016 9:01 am
தாய் உறவுகளில் உன்னதம், வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.... 01-Sep-2016 8:20 am
ஸ்வாமிசரணம் மாலதி - கிருபாகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2016 8:15 am

உன் ஆசைகள் அனைத்தையும்
என் நேசத்தால் நிறைவு செய்வேன்

உன் உள் உணர்வுகளைக்கூட
என் காதலால் அறிந்திடுவேன்

என் உதிரத்தில் கலந்தவள் நீ
உன் நிழலாகவும் நானிருப்பேன்

நீ என்னுடன் வாழும் காலம்வரை
பாசத்தை மட்டுமே நான் கொடுப்பேன்

கேள்விக்குறிகள் ஏதுமின்றி
உனக்கு என் உயிரையும் கொடுத்திடுவேன்

மரணம் வந்தால் கூட
என் காதலை நினைவுகளாக்கி
உனக்கு பரிசலிப்பேன்

வருவாயா என் வாழ்க்கை துனையாக

மேலும்

தியாகமும் ,நேசமும் ,காதலும் ஒரு புறமிருந்து வந்தால் அந்த அன்பு அர்த்தமில்லாமல் போய்விடுகிறது நண்பா உங்களை நேசிப்போருக்கும் கொஞ்சம் நேரத்தை செலவிட்டு பாருங்கள் உண்மையான அன்பை உணர முடியும் ... 27-Aug-2016 8:44 am
அருமை.... வாழ்த்துக்கள் 26-Aug-2016 5:55 pm
அன்பான உள்ளம் கிடைத்தால் வாழ்நாள் முழுவதும் ஆனந்தமே! 26-Aug-2016 10:39 am
ஸ்வாமிசரணம் மாலதி - ஸ்வாமிசரணம் மாலதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2016 12:38 pm

அழகு தேவையில்லை
ஆண்மை தேடுகிறேன் ......

இரு மலையென உன் தோள்களில்
இடையில் சிரிக்கும் காலை சூரியன் -உன் முகம் ,

கதிர் வீச்சாய் உன் பார்வை
கடலையும் அடங்க செய்யுமோ ,

தீக்குழம்பு கூட தித்திக்குமா
உன் இதழில் ,

வளைந்த புருவத்தில்
யாரை வளைக்க நீ பிறந்தாயோ ?,

கட்டபொம்மனின் வம்சமோ -நீ .....
கன்னெடுக்க முடியவில்லை உன் மீசைலிருந்து,

இயற்கை விதி என்ன செய்வது
சூரியனை போல் உன்னையும்
தலை நிமிர்ந்து தான் காண வேண்டுமோ ?,

பெண்களின் கலாச்சாரம்
உன்னால் அழிந்துவிட்டதே -உன்னை கண்டு
தலை தாழ்த்த முடியாமல் தவிக்கின்றனரோ ?

நீ ச

மேலும்

நன்றி 26-Aug-2016 12:32 pm
உண்மைதான்..நேசங்களின் உரையாடலில் உள்ளங்கள் தான் மொழிகள் 21-Aug-2016 6:01 am
அழகிய சிந்தனை... வாழ்த்துக்கள்! 20-Aug-2016 10:55 pm
ஸ்வாமிசரணம் மாலதி அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2016 4:52 pm

இன்றுவரை காத்துக்கொண்டுதான் இருக்கின்றான்
வெற்றி நம்மை தேடி வரும் என்று,
இன்னும் அவனுக்கு தெரியவில்லை
அதை நாம்தான் தேடி செல்ல வேண்டும் என்று,
வலியோடு சேர்ந்த வெற்றி
வாழ்க்கை முடிந்த பின்னும் தொடரும் .

மேலும்

நன்றி சுரேஷ் அவர்களே 25-Aug-2016 1:38 pm
தமிழ் அன்னை ஆசிகள்.சிறப்பு..இன்னும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்... 24-Aug-2016 2:51 pm
நன்றி தோழா .... 19-Aug-2016 8:06 pm
சாதனை படைக்க தூண்டும் கவிதை... வாழ்த்துக்கள் 19-Aug-2016 5:14 pm
ஸ்வாமிசரணம் மாலதி அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
18-Aug-2016 1:26 pm

வாடிய பின்னும் மலர்த்திருப்பாள் - தாய்
வாடும் பிள்ளைக்கும் சேர்ந்து சிரிப்பாள் -தாய்
என் வயறு நிறைய
அவள் வயறு காயும்- எனினும்
புன்னகை மாறாது அந்நிலவு .

மேலும்

உண்மைதான்...வாழ்த்துக்கள்...... 19-Aug-2016 8:59 pm
உண்மைதான். தாயின் அன்பு எல்லையற்றது. வாழ்த்துக்கள் .... 18-Aug-2016 7:32 pm
உண்மைதான்..தாய் இன்றி யாரும் மண்ணில் இல்லை 18-Aug-2016 1:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே