ஆண்மகன்

அழகு தேவையில்லை
ஆண்மை தேடுகிறேன் ......

இரு மலையென உன் தோள்களில்
இடையில் சிரிக்கும் காலை சூரியன் -உன் முகம் ,

கதிர் வீச்சாய் உன் பார்வை
கடலையும் அடங்க செய்யுமோ ,

தீக்குழம்பு கூட தித்திக்குமா
உன் இதழில் ,

வளைந்த புருவத்தில்
யாரை வளைக்க நீ பிறந்தாயோ ?,

கட்டபொம்மனின் வம்சமோ -நீ .....
கன்னெடுக்க முடியவில்லை உன் மீசைலிருந்து,

இயற்கை விதி என்ன செய்வது
சூரியனை போல் உன்னையும்
தலை நிமிர்ந்து தான் காண வேண்டுமோ ?,

பெண்களின் கலாச்சாரம்
உன்னால் அழிந்துவிட்டதே -உன்னை கண்டு
தலை தாழ்த்த முடியாமல் தவிக்கின்றனரோ ?

நீ சிந்தும் புன்னகையில்
எத்தனை பூ (பாவைகள்) பூக்கிறனர்

இத்தனையும் நான் ரசித்தது உன் அகத்தில்
அன்பு , கருணை கொண்ட உன் அகம்
இத்தனை அழகு கொண்டதடா -ஆண்மகனே ....

புற அழகு தேவையில்லை
அது நிரந்தரமுமில்லை

அன்புடன் சிரிக்கும்
உன் முகமே அழகானது ,

கருணையுடன் பார்க்கும்
உன் கண்களே கடவுளானது ,

இது போதும் .............

எழுதியவர் : malathi (20-Aug-16, 12:38 pm)
Tanglish : aanmagan
பார்வை : 697

மேலே