குயிலே
தனியாய் தான் நான் இருந்தேன்
தானாக நீ வந்தாய்
இதமாய் இருக்குதென்று என்
இலைகளுக்குள் புகுந்து கொண்டாய்
நிழலில் நின்று கொண்டு
நீ கொஞ்சிக் கூவினாய்
குயிலே கொஞ்சம் வெய்யில் தாழ்ந்தவுடன்
உன் கொஞ்சும் குரல் காணலியே
இளைப்பார இருந்து விட்டு
இரை தேடி பறந்தாய்
இது புறியாது நான் இருந்துவிட்டேனே..!