தாலாட்டு
தாயக நான் மாற
தரித்தாயோ -கண்ணுறங்கு ,
என் தவத்தால் எனக்கு
கிடைத்தாயோ -கண்ணுறங்கு ,
இரண்டாம் மாதம்
இலையுதிர் காலமாய்
இளைத்தேனே- கண்ணுறங்கு,
முன்றாம் மாதத்தில்
முழுநிலவாய் என் முகம்
முத்தே நீ சிரித்தாயோ -கண்ணுறங்கு ,
நான்காம் மாதம்
நகர்ந்தாயோ நந்தவனமே -கண்ணுறங்கு ,
ஐந்தாம் மாதம்
ஆராரோ நான் பாட
நீ கேட்டாயோ -கண்ணுறங்கு ,
ஆறாம் மாதம்
அரும்பே நீ குறும்பு
செய்தாயோ -கண்ணுறங்கு ,
ஏழாம் மாதம்
எண்ணில் பெரிய
மாற்றம் கண்டேன் -கண்ணுறங்கு ,
எட்டாம் மாதம்
அடி வைக்கையில்
சுகமான சுமை ஒன்று தோன்றியதே- கண்ணுறங்கு ,
ஒன்பதாம் மாதம்
ஒரு அடி கூட வைக்க முடியவில்லையடா- கண்ணுறங்கு ,
பிரசவத்தில் வலி கூட
உன் பூ முகம் பார்த்து மறந்தேனடா -கண்ணுறங்கு ,
தாயக என்னை மாற்றிய
தவமே நீ- கண்ணுறங்கு ,
அன்னை முகம்
காணாத எனக்கு -என்
அன்னை பாடிய கடைசி தாலாட்டு,
கண் மூடி கண்ணுறங்குகிறேன் ,
என் மன கண்களை திறந்து -அதில்
"என் தாய் முகம் தேடுகிறேன் "..