எதிர் வீட்டு நிலவே என்னை ஈர்க்கும் கொடியே

உன் கண்கள் என்னை ஈர்க்கின்றது...
உன் சிரிப்பு என்னை கவர்ந்திழுக்கின்றது...
உன் அருகாமை என்னை மயக்குகின்றது...
உன் பிரிவு என்னை வேதனைபடுத்துகின்றது
உன் தொடுகை என்னை என் வசம் இழக்கச் செய்கின்றது....
என்ன செய்வேன்...

அன்றொரு நாள்...
மாலை வேளையில்...
கூந்தல் நிறைய மல்லிப்பூச்சூடி
வண்ணப் பட்டுடுத்தி
கண்களிலே புன்னகை ஏந்தி
நீ என்னை கடந்து செல்கையில்
என் வசம் நான் இல்லாதவனாய்
உன் பின்னே என் மனமும்
செல்லத் தொடங்கியதடி.....!

மழையின் சாரலில்
நாம் இருவரும் நடக்கையில்
தெரியாமல் உன் கை
என் கை மேல் பட்டதே...
அப்பப்பா.....
அந்த மழையின் குளிரிலும்
எனக்கு வேர்த்து கொட்டியதடி....!

உன் கை விரலில் சிறு அடிபட்டாலும்
என் இதயமும் வலிக்கின்றதடி......!

எதிர் வீட்டு நிலவே....!
என்னை ஈர்க்கும் கொடியே....!
பள்ளி பருவம் தொடங்கி
உன்னையே சுற்றும் எனக்கு
என் மனம் அதை காதல் என உணர்த்தி
பல வருடங்கள் ஆகின்றதடி....!

இருவரும் இணைந்தே
நண்பர்களாய் விளையாடி
ஒன்றாகப் படிக்கச் சென்று
ஒன்றாகவே வளர்ந்ததால் என்னவோ...
என் எண்ணத்தை உன்னிடம் பகிர
மனம் ஏனோ தயங்குகின்றது...!

நட்பை இழக்க மனமில்லை
காதலை சொல்லாமல்
இருக்கவும் முடியவில்லை....
காதலியாய் என் மனதில்
வலம் வரும் உன்னிடம்
தோழனாய் பேச மனம் உருத்துகின்றது..!
என் காதலை நீ ஏற்பாயா......?

நட்பிற்கும் காதலுக்கும்
இடையே சண்டையிட்டு
என்னால் ஜெயிக்க இயலவில்லை...
ஆதலால்
உன்னிடமே தஞ்சம் அடைகின்றேன்....

என் மனம் நட்பை தாண்டி
காதலை நோக்கி சென்று விட்டது
உன்னிடம் காதலனாக நட்போடு
இருக்க ஆசை....
ஆனால் காதலை மறைத்து
நண்பனாக பழக
என்னால் இயலவில்லை....!

உனக்கு என் மேல்
நட்பு மட்டுமா....
நட்போடு காதலும் உண்டா...?
அதை நீயே சொல்லடி
என் கண்ணே......!

எழுதியவர் : நித்யஸ்ரீ (3-Sep-16, 4:53 pm)
பார்வை : 156

மேலே