சதி
எழுபத்தியைந்தாம் மாடியில் இருக்கும்
எழில்வதனாவினதும்
என்பதாவதும் மாடியில் இருக்கும்
இளங்கோவனதும் காதலுக்கு
இருவீட்டாரும் ஏகோபித்த எதிர்ப்பு.
இரவோடு இரவாக ஓடிப்போய்
விடுவதற்காக யாருக்கும் தெரியாமல்
குறித்த சமயத்தில்
மின்னேணி பக்கம் வந்தார்கள்
அதற்குள் வீட்டுக்காரர்கள்
எல்லோரும் திரண்டு
வெளியே வந்துவிட்டார்கள்
ஒன்றும் அறியாததுபோல
இருவரும் அவர்களுடன் கலந்து
கொண்டு புழுக்கம் பற்றிப் பேசினார்கள்.
சதிசெய்துவிட்டது மின்சாரம் !
*மெய்யன் நடராஜ்