என்னை மறந்ததேன்

என்னை மறந்ததேன்
காதலனே என்னுயிர் மன்னவனே
என் காதலை மறந்தே நீயும் சென்றதேனடா..
ஆதவனும் மறையும் முன்னே
என் உள்ளமதை நீயும் உடைத்ததேனடா..
உன் விழி அம்பாலே என் மனதை
நீயும் பறித்தாயடா...
இன்று உன் சொல் அம்பாலே
என் பூ இதயம் நீயும் துளைத்தாயடா...
என் கவிமொழியும் எனக்கு
ஆறுதல் தரவில்லையடா..
என் தாய்மடியும் இன்று ஏனோ
சுகம் தரவில்லையடா..
என் மூளைக்கும் மனதிற்கும்
நடுவினில் நடந்திடும் போரினிலே
உன் வருகைக்காய் என் மனமும்
இங்கே காத்துக்கிடக்குதடா....
உனை பிரிந்த அந் நொடியில்
என் சுவாசமதை நானும் இழந்தேனடா
எனை மறந்தே தினமும் உனையே
நானும் நினைத்தேனடா
எனை மறந்தே நீயும் சென்றதேனடா....
உயிரற்ற உடலாக என் வாழ்வும் இங்கே நகருதடா..
ஒரு நொடி உனை நானும் பார்த்தால் போதுமடா...
உன் காலடியில் என் காதல் தந்தே
என் உயிரை நானும் துறப்பேனடா.....!!