மைவிழி பார்வை போதும்
உன்னை
காணாத
இந்த நொடி
இந்த நிமிடம்
இந்த மணி நேரம்
இந்த நாள்
எல்லாமே
நீள வேண்டாம் என்று
பிராத்திக்கின்றேன் ....
உன் அருகில்
பொழுதுகள்
இரசிக்கின்றேன்...
நீ அடிக்கடி
வீசும்
மை விழி
பார்வை போதும் ....
இந்த பிறவி
முடியும்
வரை.....