திறமையை தீட்டு பொறாமையை பூட்டு

அறிந்தே படிங்கள்
பணம் மோதி திறமை நொறுங்கி
வீதி எங்கும் பரவி கிடக்கிது பொறியியல் பட்டம்

பார்த்தே பாதம் படட்டும்
வேலை எங்கும் கிட்டுமோ - என்று
தேங்கி கிடக்கும் பட்டம் பட்ட மண் துகள்களில் இருந்து

விலகியே நடங்கள்
குடும்ப சொத்து ஆழிந்திடுமோ - என்று
விற்றுச் சென்ற காணி துண்டுகளால் பெற்ற காகித துண்டில் இருந்து

திரும்பியே செல்லுங்கள்
திருப்பிச் செலுத்த முடியுமோ - என்று
கடன்பட்ட காலத்தில் பெற்ற துன்பத்தில் இருந்து

தப்பியே ஓடுங்கள்
சுமக்கவும் சுமத்தவும் முடியுமோ - என்று
திறமைக்கு வேலி இட்டு பெற்ற பெருமை
பெயரில் இருந்து

ஏற்றுக்கொள்ளுங்கள்
வணிக படிப்பும் ஏற்ற படிப்பும்
இழிவாகாது வாய்ப்புக்கள் வற்றாது - என்று
திறமையை தீட்டி பொறாமையை பூட்டி
ஆளுமையை நீட்டி வாய்ப்புக்களை கூட்டி
கொள்வதில் இருந்து

எழுதியவர் : ஹஸ்னி ஹமீட் (7-Sep-16, 12:32 am)
பார்வை : 119

மேலே