வருங்கால வாழ்க்கை
24 மணி நேரமும்
தன்னைத்தானே வருத்தி
தன்னை சுற்றியுள்ளோரையும் வருத்தி
ஒட்டு வேட்டையாடி
பதவியை பிடித்து
சட்டசபையில் அமர்ந்து
அர்த்தமற்ற அத்தனை கூத்துக்களையும்
நடத்தி வரும்
ஆட்சியாளர்கள்
வருங்கால வாழ்க்கையைக் குடிக்க
இன்றே தயாராக உள்ள
நெகிழி ஒழிப்பிற்கு
என்ன செய்துள்ளனர்??
ஊரையே கொள்ளை கொண்டு போன
வெள்ள நீரை ஏற்படுத்தும்
மாரிக் காலம் நெருங்கி வர
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
என்ன எடுத்துள்ளனர்??
இன்னமும் ஆங்காங்கே
கவிழ்ந்து விழும் குழந்தைகளை
காவு வாங்க காத்திருக்கும்
ஆள் துளை கிணறுகளுக்கு
என்ன பாதுகாப்பு நடவடிக்கை??
எத்தனை சுகமான
பயணமாக இருந்த போதிலும்
எந்த ஒரு அடிப்படை வசதியும்
அனுபவிக்க இயலாத
நான்கு வழிச் சாலையில்
ஒரு தேநீர் விடுதி கூட
அரசு சார்பில்
அமைத்து தர வழி செய்தனரா??
இறைவனுக்கே வெளிச்சம்
ஆட்சியாளரே உன் சாதனை...........