எல்லாம் வயிற்றுக்குத்தான்
எல்லாம் வயிற்றுக்குத்தான்
பள்ளிக்கூட வாசலை நானும் கண்டதில்லை
பட்டப்படிப்பினை நானும் முடிக்கவில்லை
பாமர அறிவு மட்டுமே என்னிடத்தில்
பம்பரமாய் சுழன்றே நானும்
காட்சிப்பொருளாய் ஆகுறேனே
என் அரை வயிறு நானும் நிரப்பிடவே.....
பத்து காசு நானும் கடனாய் கேட்டதில்லை
பட்டப்பகலிலே கொள்ளையும் நான் அடிக்கவில்லை
பத்து பேர் முன்னே குரங்கு வித்தையே நானும்
காட்டினாலும் என் சொந்த உழைப்பிலே வாழ்கிறேனே
என் அரை வயிறு நானும் நிரப்பிடவே....
கூட்டம் கூட்டமாய் எனை சுற்றியே மனிதர்கள்
என் வித்தை கண்டே கைதட்டி மகிழ்கிறார்கள்
நுனி கயிற்றில் நானும் என் உயிரை பணயம்
வைத்தே தினமும் செத்து பிழைக்கிறேனே
என் அரை வயிறு நானும் நிரப்பிடவே...
உறவுகள் என்றிடவே யாருமில்லை
நான் போகுமிடமெல்லாம் என் சொந்தங்கள்
தங்குமிடமெல்லாம் என் உறைவிடங்கள்
என் குரங்கு மட்டுமே என் உற்ற நண்பனாய்
அவனுடனே என் வாழ்வும் இங்கே நகர்கிறதே
அவனாலே என் வயிறும் தினமும் நிரம்புகிறதே...!!