கபகபன்னு பசிக்குதுபார்
நன்றி:#மகிழ்நன்_மறைக்காடு அண்ணா
கபகபன்னு பசிக்குதுபார்
பாழாப்போன வயிறு - இன்னும்
காவேரில தண்ணி வரல
காஞ்சி கெடக்கு பயிரு ...
(ஏ...கபகபன்னு...)
ஏழுவட்டி எட்டுவட்டி கடனவாங்கி
ஏருபூட்டி எருப்போட்டு வெதச்சு
எல்லாமே இப்போ தண்ணியில்லாமே
ஏகபோகம் ஆகிப்போச்சே தரிசு
என்னென்னமோ திட்டங்கள
எங்களுக்கா போடுதுபார் அரசு
எப்போ வந்து சேருமோன்னு
ஏங்கிக்கெடக்கு எங்க ஊரு பெருசு...
(ஏ...கபகபன்னு...)
ரயில்மறிச்சோம் பஸ்மறிச்சோம்
ராத்திரியில் கொடிபுடிச்சோம்
வீதியெங்கும் கூட்டம்போட்டோம்
வீட்டகூட மறந்து புட்டோம்
கூட்டணிக்கே ஓட்டும் போட்டோம்
கூடிக்கூடி பேசிக்கிட்டோம்
அத்தனையும் ஆகிப்போச்சே வீணே
ஆசவார்த்தகூறி செயிச்சவனும் போறான்
ஆடிக்காரிலேறி ஆடம்பரமாத் தானே ...!
(ஏ...கபகபன்னு...)
நன்றி:#மகிழ்நன்_மறைக்காடு அண்ணா
பிரதி எடுக்க திரு மகிழ்நன் அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு .அவர் அனுமதி இல்லாமல் பதிவிறக்கம் செய்ய வேண்டாமென கேட்டுக்கிறேன் ,நன்றி சுசிமணாளன்