வாழ்க்கை சக்கரம்

எல்லாம் வயிற்றுக்குத்தான்
எனக்கும் உனக்கும் துணை
இல்லாது போகவே உள்ளே
பசியெனும் நெருப்பு எரிந்திடவே
பசிபோக்க உன் பாசம் நோக்க
வீதிக்கு அழைத்து வந்தேன்
என் விதியின் சதியாலே
இங்கே
உன் ஆட்டத்திற்கு கொஞ்சம்
அள்ளிக் கொடுக்கின்றார்
என் அங்கம் தொடவே சிலர்
நினைக்கின்றார்...
என்ன செய்வேன் நான்
என்னையும் உன்னையும்
விட்டுச் சென்றோரை நோவதா
மனம் நோக இப்படி படைத்தவனை நோவதா
சொல் ஞானக் குரங்கே
#சுசிமணாளன்

எழுதியவர் : சுசிமணாளன் (6-Sep-16, 3:21 pm)
சேர்த்தது : சிட்டுக்குருவி
Tanglish : vaazhkkai chakkaram
பார்வை : 305

மேலே