என் குருவுக்கு

மாதா,
பிதா,
குரு,
தெய்வம் - என ஏடுகளில்
பயின்ற எனக்கு...
குருவே என் பகுத்தறிவின் மாதா,
என் தைரியத்தின் பிதா - என
புகட்டிய தெய்வத்திற்கு
நன்றி...!

அடுக்களையில்,
அடுப்பு கரியில்,
மளிகை கணக்கும்,
பால் கணக்கும்,
எழுதியவளுக்கு....
கரும்பலகையை
அறிமுகபடுத்தி - அதில்
அல்ஜீப்ராவும், ஆத்திசூடியும்
கற்றுகொடுக்கும்
ஆசிரியை பட்டம் சூட்டி
அழகு பார்க்கும் -
கல்வி அன்னைக்கு
நன்றி..!!

அலறி விழுந்த என் தோழியை
அழகாய் அள்ளி அரவணைத்து - நீ
அன்பு முத்தமிட்டபோது,
என் மெய் சிலிர்த்தது - உன்
தாய்மை கண்டு ...
Anti -corruption-னாய்
ஊழல் ஒழிக்க போராடும் - உன்
வீரத்தை வீட்டில் சொல்லும்போது,
என் தலை நிமிர்ந்தது - நானும்
உன் மாணவி என்று...

புழுதி தட்டி, புத்தி புகட்டும்
பாடம் பயிற்றுவித்தாய் - பண்பாய்...
புதுமை பெற்று, புதுகவிதை
படித்துகொண்டிருகிறேன் உன் முன் - தெம்பாய்...
அறிவளித்த அன்னை உனை,
அரவணைக்க ஆசைபடுகிறேன் - அன்பாய்....

கல்வியுடன், கலைகளையும்
கற்றேன் - கனிவாய்...
கல்வியின்மை எனும் களை
எடுப்பேன் - துணிவாய்...
எனை வடிவமைத்த - உமக்கு
தலை வணங்குகிறேன் - பனிவாய்...

எழுதியவர் : மணிகண்டன் (9-Sep-16, 5:29 pm)
Tanglish : en kuruvukku
பார்வை : 12816

மேலே