வெற்றி முழக்கம்
வெற்றி முழக்கம்
*********************
வாகை பூச்சூடவா...
எதிர்த்து வந்தவனை
வெட்டி சாய்க்க வா...
எதிரில் நிற்பவன்
எவனாக இருந்தாலும்
எட்டி உதைத்திடு...
எல்லா ஊரும்
கேட்கும்படி கொட்டு முரசு...
நம் நிலத்திற்கு
உரம் கிடைத்ததென்று
கொன்று குவித்திடு...
வென்று களித்திடு...
தக தகவென்று
மள மளவென்று
வெட்டி சாய்த்திடு வீரா...
அவன் இரத்தத்தால்
உன் தாகம் தணித்திடு..
பரி போல் விரைந்திடு
தரிசாக்கிடு பகைவனை -இது
கொற்றவனின் வெற்றி முழக்கம்
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

