காத்திருக்கிறேன் உன் வருகைக்காக

காற்றாய் வருகிறாய்
நான் சுவாசிக்க

கனவாய் வருகிறாய்
என் உறக்கத்தை களைக்க

நினைவாய் வருகிறாய்
என் தனிமையை ரசிக்க

என்னில் வருகிறாய்
என் பெண்மையை உணர

எப்போது உண்மையாய் வருவாய்
என்னை நேசிக்க

காத்திருக்கிறேன் உன்னை வாழ வைக்க உண்மையான அன்புடன்

வந்து விடு
என் வாழ்விற்கும், என் கவிதைக்கும்
அர்த்தம் தந்திடு

எழுதியவர் : கவி (29-Jun-11, 11:22 am)
பார்வை : 935

மேலே