விடியலை நோக்கி

காலங்கள் பல கடந்தன
கனவும் பலிக்கவில்லை
பூமியில் பிறந்தேன் பலனெதுவும் காணவில்லை
பூவா நிலவென மிளிர்கின்றேன்
பரிப்பாரில்லை , பாதுகாப்பும் இல்லை
பாசத்தை தேடினேன் நேசத்தைக் கண்டிலேன்
வேஷம் எல்லாம் என வெதும்பினேன்
விரக்தி உற்றேன்,
உள்ளம் பள்ளமாகி வெள்ளம் பாய்ந்ததே அன்றி
வெள்ளி நிலவோ மிளிரவில்லை
கள்ளமே எங்கும், கண்டிலேன் உண்மையை :
உண்மையே உனக்கும் விலைவைத்தனரோ?
விதிதான் இதுவோ ?
விளக்கம் கிடைக்கவில்லை.
விவரமும் புரியவில்லை
விடியலை நோக்கியே பறக்கின்றேன் நானுமே
நம்பிக்கையுடன் நாளுமே..

எழுதியவர் : திருமதி ஸ்ரீ .விஜயலட்சுமி (29-Jun-11, 10:29 am)
பார்வை : 490

மேலே