அகம் பத்து --- ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்

அகம் பத்து --- ஒரு விகற்பக் குறள் வெண்பாக்கள்


மாதர் முகம்போல் மலர்ந்திடும் தாமரை
காதலைக் கூறும் களிப்பு .


மதியும் மகளிர் மனமு மறியாப்
பதியு மிருந்தென் பலன் .


அனிச்ச மலரி னகத்தின ளுள்ளம்
பனிமேல் பசலை படந்து .


மலர்முகப் புன்னகை மாய்க்கும் மனத்தாள்
பலர்காணா பாவையெழில் பார்த்து .


கண்ணழகில் காளையர் காதலால் வீழ்த்திடும்
வண்ணமிகு பெண்ணின் வனப்பு .


ஊடல் தவறில்லை உள்ளம் புணர்தலில்
கூடலும் சான்றோரின் கூற்று .


முத்தங்கள் தந்தவிடம் முள்ளாகிக் குத்திடவும்
பித்தனாகி நின்றேன் பிணக்கு .


மண்நோக்கும் காலை மதிமுகம் நோக்காக்கால்
கண்ணோக்கி வாழ்வதென் கண்டு .


நோக்கும்கண் பாராது நோயால் வயப்பட்டே
ஆக்குதலு மில்லை அகம்.


கடைக்கண் கனியவும் காமத்தின் நோயு
மிடைவிடா துன்ப மினி .

ஆக்கம் :-
கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்.

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (12-Sep-16, 10:35 am)
பார்வை : 52

மேலே