காதலும் மலரும் ஒரு ஜாதி

வாச நறுமலர் மலர

நிலைகள் நான்கு

செடியின் காம்பின் நுனியில்

வருவது முதற்கண் அரும்பு

காதல் காதலாய் மலரும் முன்னே

மங்கை மணாளன் பார்வை பரிமாற்றம்

அரும்பிலே வளர்ந்தது மொட்டாய் மாறிடும்

இது மலரின் வாழ்வில் நிலை இரண்டு

பூக்கள் இதழ்கள் எல்லாமும் மொட்டில் அடக்கம்

மொட்டிற்கும் அழகுண்டு ஆனால் அதற்கு

அப்போது பாதுகாப்பு சிற்றிலைகள்

இது தான் நிலை மூன்று

பார்வை பரிமாற்றம் மனதில் பதிந்தால்

காதல் பூ அரும்பி மொட்டாகி நிற்கும்

மொட்டு மலர்ந்து முழுதாய் மலர்ந்திட

பூவிற்கும் தேவை காலா அவகாசம்

இரு நாட்களிலேயே மொட்டு மலராகும்

மல்லிகை ரோசா பூக்கள்

குறிஞ்சி மலர பன்னிரண்டு வருடங்கள்!


மொட்டான காதல் மலராய் மலர்ந்திட

காதலர்கள் காதல் பரிமாற்ற எழுச்சிகள்

காரணமாய் வந்து நிற்கும்

மொட்டாய் மலராது மாய்ந்திடும்

சில மொட்டுக்கள்

முழுதாய் மலராத காதல் போல

அன்பின், பண்பின் அரவணைப்பில்

வளரும் காதல் மலர்ந்திடும் ஒரு நாள்

காதல் மலராய் அங்கு மலராய் மலர்ந்திடும்

வண்ண வண்ண வாசமலர்கள் போல.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Sep-16, 1:12 pm)
பார்வை : 99

மேலே