குடை

மழை இடி முழக்கத்தோடு வெளியே கொட்டிக் கொண்டிருந்தது. “நேற்று எரித்த வெய்யிலுக்குப் பதிலாக இன்று வானம் கண்ணீர் விடுகிறது” என்றாள் கனகம். செல்லத்துரையருக்கு தன் பெனசன் விஷயமாக கொழும்பு கச்சேரிக்குப் பஸ் எடுத்துப் போக வேண்டிய அவசியம் இருந்தது. பலதடவை போய்வந்தும் அவர் பிரசனை தீரவில்லை அவருக்கு தடிமன் காச்சல் வந்து சுகமாகி இரண்டு நாட்களாகி விட்டது.; மழைக்குள் போய் நனைந்து வந்து வருத்தத்தை திரும்பவும் தேடிக் கொள்ள வேண்டாம் என அவர் மனைவி கனகம் சத்தம் போட்டாள். கணவனுக்குக் காய்ச்சல் என்று வந்தால் தான் படும் கஷ்டம் அவளுக்குத் தான் தெரியும். மருந்து குடிக்க சிறு பிள்ளை போல் அடம்பிடிப்பாhர் செல்லத்துரையர். வாய் கட்டப்பாடு கிடையாது. கொத்தமல்லித் தண்ணியென்றால் அவருக்கு விஷம்மாதிரி.
செல்லத்துரையரின் மகன் லண்டனில் இருந்து அனுப்பிய விலை உயர்ந்த மார்க்ஸ் அன் ஸ்பென்சர் குடை சுவரில் கம்பீரமாக தொங்கிக்கொண்டிருந்தது. பல காலம் செல்லத்துரையர்; கந்தோருக்குப் போய் வர பாவித்த குடை வயதாகி பளுப்பு நிறத்துடன புதுக்குடையின் வருகைக்கு பி;ன் கவனிப்பரற்று ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தது. விலையுர்ந்த குடை. அடிக்கடி செல்லருடன் கம்பீரமாக வெளியே பொய் உலாவி வரும். பழைய குடையை எடுத்துச் செல்வதை அவர் தவிhத்தார். நீ எனக்காக உழைதடது என்னை வெய்யிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்பு தந்தது போதும். இனி- உனக்கு ரிட்டயர் வாழ்க்கை என்பது போல் பழைய குடையை செல்லத்துரையர் உதாசீனப்படுத்தினார். உள்நாட்டு குடைகைளை மற்றவர்கள் கொண்டு செல்வதைக் கண்டால் புதுக் குடைக்கு ஒரு அலட்சியம். வெளிநாட்டிலிருந்து பீளெனில் வந்த குடை நான் என்ற பெருமை. தனது நண்பர்களிடம் தனது மகன் லண்டனில் இருந்து அனுப்பிய அதிக விலை உயர்ந்த குடையைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். சிறீலங்கா காசிலை பவுணில் இருந்து ரூபாவுக்கு மாற்றினால் குறைந்தது 3000 ரூhபாய் பெறுமானம் இருக்கும். அரை மாத சாப்பாட்டு செலவுக்குப் போதுமான பணமது.
“ என்ன கனகம் மழை கொஞ்சம் விட்டுது போல கிடக்குத. மணியும் ஒன்பதாகிப் போச்சு. பஸ் எடுத்து கச்சேரிக்கு போய் சேர குறைந்தது ஒரு மணித்தியாலம் வேண்டும். மத்தியானச் சாப்பாட்டு நேரத்துக்கு முதல் போயாகவேண்டும் இல்லாட்டால் இரண்டு மணிமட்டும் கச்சேரியிலை தூங்க வேண்டும். என்னுடைய பென்சனிலை மாதம் பிழையாக ஐந்நூறு ரூபாய் கூட ஒரு வருஷமாக கழிக்கிறான். அதைப் பற்றி போட்ட கடிதங்களுக்குத் தக்க பதில் இல்லை. கச்சேரியிலை வேலை செய்து மூன்று மாதத்துக்கு முந்தி ரிட்டயரான சோமசுந்தரம் என்றவருக்கு இரு நூறு ரூபாய் கொடுத்தனான் என்டை கழிவைச் சரி செய்து எனக்கு வரவேண்டியதை எடுத்துர் தரச்சொல்லி. ஒரு மாதமாச்ச. ஆளிண்டை பெச்சு மூச்சைக் காணோம். நேர போய் சந்தித்து சப்ஜெக்ட் கிளாக்கிண்டை கையிலை வைத்தால்தான் எதும் நடக்கும” செல்லத்துரையர்; புறுபுறுத்தபடி குடையை எடுக்க போனார்.
“ இஞ்ஞாருங்கோ இந்தக் கொத்தமல்லித் தண்ணியை குடித்துப்பொட்டு போங்கோ. கெதியிலை மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்திடுங்கோ. போகிற இடத்திலை கண்டதை கடையதை சாப்பிடாதையுங்கோ. பஸ்சிலை போகிறது கவனம் பர்சை பிட்பொக்கட் அடித்துப் போடுவானகள்;. புதுக் குடை கவனம். அவன் தம்பி உங்களுக்காக பிரண்ட் மூலம் வாங்கி அனுப்பினவன். ஏதோ இருபது பவுணாம். திறமையான குடையாம். இங்கத்து கணக்கிலை ரூபாய் 3000க்கு மேலை பெறுமதி. கவனயீனமாய் விட்டிட்டு வந்திடாதையுங்கோ” கனகம் எச்சரித்தபடி கொத்தமல்லித தண்ணியைச் செல்லத்துரையரிடம் கொடுத்தாள். அவரும் அவசரம் அவசரமாக மடக் மடக்கென்ற குடித்துப்போட்டு சப்பாத்தை மாட்டிக் கொண்டு புதுக் குடையும் கையுமாக வெளியே இறங்கினார். குடை அவரை வெய்யில் மழையில் இருந்து மட்டும் பாதுகாப்பது மட்டுமல்லாமல் கைத்தடியாகவும் சில சமயங்களில் உதவியது. அதை வீசி வீசி அவர் பாதையில் நடக்கும் போது ஒரு தனி அதிகராத் தோற்றத்தை அவருக்கு கொடுத்தது.
காலி வீதிக்கு வந்தபோது போக்கு வரத்து நெருக்கடியைப் பார்த்த போது செலத்துரையருக்கு பயம் வந்திட்டது. நல்லகாலம் வீதியைக் கடந்து மறுபக்கம் போய் பஸ ;எடுக்கவேண்டிய நிலை அவரக்கு இருக்கவில்லை. பஸ் எடுத்துப் போய்ச் சேர அதிக நேரமாகலாம். அவர் போகிற பஸ் ரூட் நம்பர் போட்ட இரண்டு பஸ்கள் வந்தது. ஆனால் சனம் நிறைம்பி வழிந்து தொங்கிக் கொண்டு போனதால்; அவரால் ஏற முடியவில்லை. மழை விட்டு வெய்யில் தனது அதிகாரத்தை காட்டிக் கொண்டிருந்தது.
“ அனே மாத்தயா இந்த ஒரு மாதக் குழந்தைக்கு பசிக்கு எதாவதும் கொடுங்கோ. “ என்று சிங்களத்தில் பஸ்;ஸடாண்டுக்கு அருகே உள்ள பிச்சைக்காரி ஒருத்தியின பரிதாபக் குரல் போவோர் வருவோரின் கவனத்தை கவரவில்லை. அவளுக்கு குறைந்தது இருபத்ததைந்து வயதிருக்கும். கிழிந்த சேலை அவளது அங்கத்தின் சில பகுதிகளை விளம்பரம் செய்தது. அதை கடைக்கண்hல் பாhத்து இரசித்தபடி சென்றவர்கள் அந்த இலவசக் காட்சிக்காவது சில்லரையைப் போடவில்லை. அவர்களுக்கு அதில் நின்று அவளின் சோகக் கதையை கேட்க நேரமில்லை. கொளுத்தும் வெய்யிலில் குழந்தை வெப்பம் தாங்காமால் அழுது கொட்டியது. யாரோ ஒரு தர்மவான் போட்டு சென்ற பழை பாண் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு குழந்தையின் வாயுக்கள் திணித்தாள் அவள். குழந்தை அதைச்சாப்பிட மறுத்து தாய் பாலைத் தேடி அழுதது. குழந்தை பிறந்து குறைந்தது மூன்று மாதம் இருக்கலாம். அவளைப் போல் எத்தனையோ வாழ்ககையில் வழுக்கி விழுந்த பெண்கள் கைக்;குழந்தைகளோடு பாதை ஓரங்களில் முடங்கிக் கிடப்பதைக் காணலாம்.; இரவு நேரங்களில் கடை ஓரங்களில் உள்ள சிமேந்துப் பகுதிகள் தான அவர்களின் படுககை அறை. மழை வெய்யில் என்று பாராமல் அவர்கள் பிழைப்பு காலி வீதியை நம்பி இருந்தது. யாராவது புதுமுகம் அவர்கள் படுக்கும் இடத்ததை ஆக்கிரமித்து விட்டால் தூஷணவார்ததை ஏவுகணைகளாக பறக்கும். சில சமயம் தலை மயிரைப் பிடித்து சண்டையிலும் இறங்கி விடுவார்கள். சண்டையைத் தீர்க்க தெருச் சண்டியன் வேறு. அவன் அதில் எத்தனை பெண்களுக்கு புருஷனோ அவர்களைக் கேட்டுத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப் பெண்களின் சண்டையைப் பார்த்து இரசிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்தது.
******
எதோ ஒரு வழியாக வெள்ளவத்தை விகார லேனுக்கு முன்னால் இருந்து புறக்கோட்டைக்குப் போகிற பஸ் அவருக்கு கிடைத்தது அவர் அதிர்ஷ்டம். பஸ்சில் அசையமுடியாத கூட்டம். ஒரு கையில் குடையை இறுகப் பிடித்தபடி மறு கையால் பஸ்சுக்குள் தொங்கிய வலையத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நின்றார செல்லத்துரையர்;. அந்தக் கலையில் அவர் பழக்கப்பட்டவர்.. பஸ் சாரதி போடுகிற தீடீர் பிரேக்கில தனக்கு முன்னால் நிற்கும் பெண்ணோடு மோதாமல் கவனமாக இருந்தார். மோதினால் அதன் விளைவு அவருக்குத் தெரியும். அவருக்கு சற்று முன்னே சேலை கட்டிய பெண்ணொருத்தியை பி;ன்னால் இருந்து தன் உடம்பால உராசியவாறு இன்பம் கண்டுகொண்டிருந்தான் சாரம் கட்டிய பேர்வழி ஒருவன். அவனின் கைகள் அடிக்கடி அப்பெண்ணை பின பகுதியை வருடியதை அவர் கண்டுவிட்டார். அவள் என்ன செய்வது என்று தெரியாமால் நெளிந்தாள். அவள் நெற்றியிலோ ஒரு குங்குமம் பொட்டு. நிட்சயம் திருமணமான தமிழ் பெண்தான். குழந்தைகள் கூட இருக்கலாம். பாவம் குடும்பத்திற்காக பஸ் ஏறி இப்படி அவஸ்தைபட்டு வேலைக்குப் போக வேண்டிய நிலை அவளுக்கு. பஸ் பிராயாணத்தில் தான் எத்தனை காமுகர்களை அவள் சந்திக்க வேண்டி இருக்கிறது. செல்லத்துரையருக்கு இதெல்லாம் புதுமையான காட்சியல்ல. அவர் கோட்டையில் வேலை செய்த போது தினமும் பஸ்சில் தான் போய் வந்தார். அதனால் பல காட்சிகளைக் கண்டு அனுபவப் பட்டவர். ஒரு தடவை அவர் பணம் செய்தபோது ஒரு பெண் தனக்கு பின்னால் நின்று தன் உடம்பை அழுத்தி சேட்டை விட்டவனுக்கு விட்டு இறங்க முன், குத்தக்கூடாத இடத்தில குத்திவிட்டு, கூட்டததோடு கூட்டமாய தீடீரென இறங்கி மாயமாக மறைந்த சம்பவத்தை அவர் இன்னும் மறக்க வில்லை. அதே போல் இன்னொரு சேட்டை போவழியை தன் கையில இருந்த குடையால் தாக்கி பலரின் ஆதரவை பெற்ற கவுன் அணிந்த பறங்கிப பெண் ஒருத்தியை நினைத்த போது செல்லருக்கு இந்தப் பெண்ணும் அப்படி ஒரு தமிழ் வீராங்கனையாக மாட்டாளா என்ற எண்ணம் வந்தது.
செல்லத்துரையரை கொண்டக்டர் டிக்கட் கேட்ட போது எதோ ஒருவழியாக பஸ் குலுக்களில்; சேர்ட் பொக்கட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்தார். பஸ் ஒரு குலுக்களுடன் பம்பலப்பிட்டியில் நின்றது. அவருக்குப் பகத்தில் இருந்த சீட்டில் இருந்த மூவரும் இறங்கினார்கள். செல்லத்துரையருக்கு தனக்கு லொட்டரி போல் கிடைத்த கோர்னர் சீட்டில் போய் அமர்ந்தார். குடையை தனக்கு அருகே பத்திரமாக வைத்துக் கொண்டார். தனது பர்சை அடிக்கடி தடவி பாhத்துக்கொண்டார். பிளேட் பாவித்து பிட்பொக்’கட் அடிக்கும் பேர்வழிகள் சம்பள நாட்களில் பஸ்சில் அதிகம். செல்லத்துரையர் ரிட்டயராகமுன்னர் தபாற் தந்தி திணைக்களத்தில பரிபாலன அதிகாரியாக வேலை செய்தவர் டியூக் பாதையில் உள்ள தலமையகத்தில் எழாதவது மாடியில் அவருக்கென சிறு அறையிருந்தது தினமும் ஒரு கையில் திணைக்களத்தில கறுப்பு நிற தோல் பையும், குடையுமாகத் தான் செல்லத்துரையர் வேலைக்குப்போவது வழக்கம். மத்தியானப் போசனத்தை வேலை செய்வோருக்கு சைக்கிலில எடுத்துச்செல்லும் சாப்பாட்;டுக்கார சோமுவிடம் கொடுத்தனுப்புவாள் கனகம். பிளேட்டில் மத்தியானச் சாப்பாட்டை அழகாகக பரிமாறி செல்லருக்கு பிடித்த மீன் பொரியலையும் மோர் மிளகாய் பொரியலையும், ஊறுகாயையும் ஓரமாக வைத்து இன்னொரு பிளேட்டால் முடி , வெள்ளைத் துணியால் கட்டி, செல்லரின் பெயர் , வேலை செய்யும் விலாசம் , வகிக்கும் பதவியின் பெயர் ஆகியவற்றை உள்ளடக்கிய லேபலையும் கட்டி அனுப்புவாள் கனகம்;. எக்காரண்தைக் கொண்டும் வெளியில் சாப்பிடக் கூடாது என்பது அவருக்கு கனகத்தின் கட்டளை. ஆனால் சாப்பாட்டுக் கரியர் செல்லத்துரையரை போய் அடையும் போது வெள்ளைத் துணியில் குளம்பு ஊறி மஞ்சளாக மாறியிருக்கும். காரணம் பல கைகள் மாறி, சேர வேண்டிய இடத்தை சாப்பாட்டுக் கரியர் போயடையும் போது ஏற்பட்ட குலுக்களின் விளைவே துணியின் அந்த நிறமாற்றம். சில சமயங்களில் வேறு ஒருவரின் சாப்பாடு அவரைப் போய் அடைவதுமுண்டு. பஸ்சி;ன் ஜன்னலூடாக அவர் சிந்தனைகள் தனது வேலைசெய்யும் போது ஏற்பட்ட கடந்த கால அனுபவங்களை நோக்கிச் சென்றது. தன்னொடு வேலை செய்த சிங்கள நண்பர்களோடு உணவைப் பகிர்ந்துண்டதை நினைக்கும் போது அவருக்கு சிரிப்பாக வந்தது. அந்த சுகமான உறவு 1983ம் ஆண்டு கலவரத்துக்குப் பின் ஓடி மறைந்துவிட்டது.
காலி முக மைதானத்துக்கு முன்னால் பஸ் நின்றது. என்ஜின் தகராறு செய்ததினால் புறப்புட அரைமணி நேரமாகும்; என்றான் டிரைவர். நல்லகாலம் ஜன்னல் சீட் கிடைத்தபடியால் பாசி மணம் கலந்த கடற்கரை காற்று முகத்தில் பட இதமாக இருந்தது. கடற்கரை யோரமாக போடப்பட்டிருந்த சீமேந்து இருக்கைகளில், ஒரு குடையின் மறைவில் ஒரு சோடி ஜீவன்கள் தங்களை மறந்து சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தது அவர் பார்வைக்குப் பட்டது. வீதி ஓரத்தில் சல்லாபம் , பஸ்; பணத்தின் போது சல்லாபம் , கடற்கரை ஓரத்தில் சல்லாபம். ஏன் இவர்களுக்கு வீடு வாசல் இலலையா?. மிருகங்களைப் பொலல்லவா நடக்கிறார்கள். நாட்டில் ஒழுக்கம் சீரழிந்து விட்டதா. இவர்களி;;ன் நடத்தைக்கு ஒத்தாiசாயக குடை உதவியது. ஆதுவம் ஊள்ளூர் குடை. ஆடவனின் ஒரு கை குடையை பிடித்திருக்க, மறு கை சிருங்கார விளையாட்டுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அவர்களி;ன் காதல் விளையாட்டை தினப்பத்திரகை ஒன்றை எதோ வாசிப்பதுபோல் பாவனை செய்தவாறு ஒரு முதியவா,; அடல்ட்ஸ ஓன்லி படம் பார்த்து இரசிப்பது போல் இரசித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு துணையாக இருந்த குடை முதியவர் அக்காட்சியை பார்பதற்கு இடைஞ்சலாக இருந்தது. வீசியை காற்றில் குடை பறந்து போய்விடாதா என்ற நப்பாசை அக் கிழவனுக்கு மிசை நரைத்தாலும் ஆசை நரைக்வில்லை போலும் என செல்லர் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். விகாரமகாதெவி பூங்காவிற்கு வரும் இளம் தம்பதிகளி;ன் சிருஙகார விளையாட்டுகளை பார்த்து இரசிப்பதற்காக, துவாரம் செய்த பத்திரிகையும் கையுமாக பூங்காவை வாசிகசாலையாக்க வரும் கூட்டம் ஒரு புறம். முனிதனின் நெறி தவறிய செயல்பாடுகளுக்குத் தான் எல்லை கிடையாதே!
ஓரு பாடாக பஸ் திரும்பவும் புறப்பட்டது. செல்லத்துரையர்; கைக்கடிகாரத்தை பார்த்தார். பஸ் ஏறி ஒரு மணித்தியாலமாகிவிட்டது. கடந்த தூரமோ ஏழு மைல்கள். மத்தியானப் போசன நேரத்துக்கு முன் கச்சேரிக்குப் போயாக வேண்டும். இல்லாவிட்;டால சப்செஜக்ட் கிளார்கை பிடிக்க முடியாது. கச்சேரியை வந்தடையும் போது நேரம் பதினொன்றாகி விட்டது. வாசலில் நின்ற பீயூனைப் பாhத்து தனக்குத் தொந்த அரை குறை சிங்களத்தில சப்செஜக்ட் கிளார்கின பெயரைச் சொல்லி பென்சன் விஷயமாக பார்க்க வந்திருப்பதாக சொன்னார். பியோன் சொன்ன பதில் அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.
“மாததையாவிணடை அம்மா நேத்து இறந்திட்டா. மாத்தையா ஒரு கிழமை லீவு என்றான் பியோன். நான வெளிக்கிட்ட முழிவியளம் சரியல்லை போலும். இ;ந்த பென்சன் விஷயத்துகாக செயத பிரயாணச் செலவும் நேரமும் கூட்டிப் பாத்;தால் இவ்வளவுக்கு எனக்கு செர வேண்டிய பணத்தைப் பெற இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா எனத் தனக்குள் அங்கலாயித்துக் கொண்டார். வெய்யிலின் அகோரம் குறையவிலலை. கச்N;சரி வாசலில் செவ்விளநீர் விறபவனிடம் ஒரு இளனீரை வெட்டிவித்து குடித்த போதூன் அவருக்கு மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
பஸ்சைப் பிடித்து வீடு போய் சேருவதற்கு. பஸ் ஸடாண்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த செல்லருக்கு குழநதை அழும் சத்தம் கேட்டது. உடனே அவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தன் மகளுக்கு பிறந்த பேத்தி துர்ககாவின் நினைவு தான் வந்தது. அவர் கேட்ட அழகைக் குரல் துர்காவி;ன் குரல் போல் அவருக்கு இருந்தது. குரல் வந்த திசையை நோக்கினார். வீதுp ஓரம் கொளுத்தும் வெய்யிலி திரும்பவும் வெள்வததையில் தான் பார்த்த பிச்சைக்காரி பெண் கைக் குழந்தையோடு. ஆனால் இந்தத் தடவை; கையில் குறைந்தது ஒரு சில நாட்ககுளுக்கு முன் பிறந்த பெண் குழந்தையோன்றுடன் பாதை ஓரத்தில் துணி விரித்து பிசசை எடுத்துக்கொண்டிருந்தாள் ஒரு பிச்சைக்காரி;. வாழக்கையில் ஒரு சில நிமிட சிற்றின்பத்திற்காக ஆடவன் ஒருவனால் வஞசிக்கப்பட்டவள் அவள். வறுமைக்காக தன் கற்பை விலை பேசி விற்றுப் பெற்ற வெகுமதி அவள் iகியல். தோற்றத்துக்கு மலைநாட்டு இந்திய வம்சவழி வந்த பெண்போல் இருந்தது. சிங்களத்திலும் மலை நாட்டுத் தமிழிலும் அவள் பிச்சை கேட்டதில் இருந்து அதை செல்லத்துரையர் ஊகித்துக் கொண்டார்.
“இது உன் குழந்தையா?” தமிழில் அவளைக் கேட்டார் செல்லத்துரையர்.
“ ஆமாம் சாமி. பிறந்து ஒரு கிழமை தான் சாமி.”
“ அது சரி நீ பேசுவதைப் பால்க்க மலைநாட்டை சேர்ந்தவள் போல் இருக்கிறதே”? செல்லத்துரையர் அவளைக்; கேட்டார்.
“ ஆமாம் சாமி. என் சொந்த ஊர் பண்டாரவளைக்கு அருகேயுள்ள ஒரு சிறு கிராமம். அங்கு தெயிலைத் தோட்டத்தில கொளுந்து பிடிங்கிக கொண்டிருந்தனான். ஒரு சிங்களவன் ஒருவானால் வேலை எடுத்துத் தாறன் என்று கொழும்புக்கு வந்து ஏமாற்றப்பட்டவள் நான். இநத குழந்தை தான் அவன் எனக்குத் தநத பரிசு”
“ அது சரி அவன் இப்ப எங்கே”?
“ அவன் என்னை விட்டு போய் மூன்று மாதமாகிறது. ஆளைத் தேடினேன் கிடைக்கவில்லை. என்னைப் போல எத்தனைப் பெண்களை ஏமாற்றினானோ தெரியாது.
“நீ திரும்பவும் சொந்த ஊருக்குப் போயிருக்கலாமே”.
“கையில்; குழந்தையோடு போயிருந்தால், கங்காணயாக இருகுகும் என் தந்தை எனனை கொன்றிருப்பார்.”
“அப்போ இனி உன் வாழ் நாள் முழுவதும் பாதையோரத்தில் இருந்து பிச்சை எடுத்து நீயும் குழநதையும் வாழப் போகிறீர்களா”?
“ என்ன செய்வது. என் உடல் இருக்கிறது எனக்கும் குழந்தைக்கும் வயிற்றிப் பசியைத் தீர்க்க. ஆண்களின் பசியயைத் தீர்த்து எங்கள் பசியயை தீரத்துக்கொள்ள வேண்டிய நிலை எனக்கு”.
“ எஙகேயாவது போய் வீட்டு வேலை செய்து பிழைக்கலாமே”.
“கைக் குழந்தையோடு இருக்கும் எனக்கு யார் வேலை தரப்போகிறார்கள்”?
தீடிரென்று மழை திரும்பவும் தூறத் தொடங்கியது. தன் முந்தானையல் குழந்தையின் தலையை அவள் மூடினாள். தூரத்தில் வெள்ளவத்தைக்கு போக வேண்டிய பஸ்வந்து கொண்டிருந்தது. அந்தப் பிச்சைக்காரி iயில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டைத் திணித்தார் செல்லத்துரையர்.
“ வேண்டாம் சாமி. இந்த தொகை கூடிப்போச்சு”.
“பரவாயிலலை. சில நாட்களுக்கு உணவுக்கு உதவும். பிள்ளையின் பசியும் தீரும். இந்தா இதை வைத்துக்கொள். மழை கொட்டப்போகுது. குழந்தையை நனையாமல் பார்த்துக்கொள்” என்று தன் கையில் இருந்த புதுக் குடையை அவள் கைiயில் கொடுத்தார். அவளால் அவர் செய்ததை நம்பமுடியவில்லை.
“குடை வேண்டாம் சாமி” என்று அவள் அவரைத் தடுக்க முன் அவர் பஸ்சில் போய் ஏறினார் . செல்லத்துரையருக்கே தான் செய்த செயல் ஆச்சாரியமாக இருந்தது. ஏதோ அந்தப் பெண்ணுக்கும் குழநதைக்கும் உதவ வேண்டும் என்ற உந்தல் அவரை அத்தானத்தைச் செய்ய வைத்தது, அப்பெண்ணை தன் வசதி படைத்த மகளின் நிலையுடன் ஒப்பிட்டு அவர்; பார்த்ததும் ஒரு காரணமாகும்.
*******
“என்னப்பா இவ்வளவு நேரம் செய்தனீங்கள். எங்க குடையை கையிலைக் காணம்? குடைக்கு என்ன நடந்தது?, கனகம் செலலத்துரையரைப் பார’த்துக் கேட்டாள்.
“கொஞசம் பொறும் நடந்ததை சொல்லுகிறன். எனக்கு எதாவது கடிதங்கள் வந்ததே”. வந்த களைப்பில் கதிரையில் போய் அமர்ந்தார்.
“இரண்டு கடிதம் வந்தது. ஹோல் மேசையிலை வைச்சிருக்கிறன். போய் பாருங்கோ. அது போகட்டும். நீங்கள் கொண்டு போன புதுக் குடை எங்கை? அதை முதலிலை சொல்லுங்கோ”?
“பதட்டப்படாதையும். போகக்கை பஸ்சிலை சரியான நெருக்கடி. சீட்டில் இருக்கும் போது குடையை முன்னுக்கு மாட்டியிருந்தனான். இறங்கும் அவசரத்திலை அதை எடுக்க மறந்திட்டன். என் யோசனை முழுவதும் என் பென்சன் பற்றி இருந்ததே காரணம்”, முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பதில் சொன்னார் செல்லத்துரையர்.
“உங்களுக்கு ஞாபகம் மறதி வர வர கூடிக்கொண்டு போகுது. உதுக்குத் தான், நீங்கள் போகக்கை தம்பி அனுப்பிய புதுக்குடையை விட்டிட்டு பழைய குடையயைப் கொண்டு போங்கோ எண்டு சொன்னான். நீஙகள் நான் சொன்னதைக் கேக்காமல நடப்பாய் கொண்டு போனியள். இப்ப குடையை துளைச்சுப்போட்டு வநதிருக்கிறியள” கோபத்தோடு கனகம் சொன்னாள்.
“சரி சரி கனகம், என்னைக் கோவியாதையும். நடந்தது நல்லதுக்கே நடந்துவிட்டது. தம்பிக்கு எழுதினால் அவன் இன்னொரு குடையை வாங்கி அனுப்பிவைப்பான். இனி கவனமாக இருக்கிறன்” எனக் கூறியவாறு தனக்கு வந்திருந்த கடிதத்தின் வெளி பக்கத்தைப் பார்த்தார். அரசாங்க முத்திரையிட்ட கடிதமாக இருந்தது. அவசரம் அவசரமாக அதை அவர் கிழித்துப் போது அதற்குள் 15,738 ரூபாயுக்கு ஒரு செக்கும், சிங்களத்தில் ஒரு கடிதமும் இருந்தது. பின பக்கத்தில் அதன் மொழி பெயர்ப்பு இருந்தது. வாசித்த போது செல்லத்துரையருக்கு தலைகால் புரியாத சந்தோஷம். எதற்காக அவர் பஸ்சில் பல தடவை பென்சன் கொடுக்கும் பகுதிக்குப் போய் வந்தாரோ அந்த் பென்சனில் அவர்களால் அதிகம் கழிக்கப்பட்ட மொத்தப் பணம் செக்காக வந்திருந்தது. இனி அவரது பென்சன் மாதம்; ரூபாய் 538.45 அதிகரிக்கும். தான் செய்த தர்மம் தனக்கு வேறு விதத்தில் உதவி செய்துள்ளதை நினைத்த போது அவர் மனம் இறைவனுக்கு நன்றி செலுத்தியது.
******