கண்ணீரில் கரைந்த தண்ணீர்

மலையின் மடுவிலேயே
பிறந்தாயடி காவேரி
உன் மக்கள் பசியாற
ஊர் பல நடந்தாயடி காவேரி

காய்ந்த பல மண்
நணைத்தாயடி
விவசாயம் என்றும்
செழிக்க நிணைத்தாயடி

எங்களுக்கு தெய்வமாய்
வரம் பல தந்தாயடி
உன்னில் நாங்கள் தொலைத்த
பாவங்களை நீ சுமந்தாயடி ,

மூடர்கள் சிலர் உன்னை
முடக்க ...
சுயநல வாதிகள் உன்னை
அடக்க
அணைக்குள் தேங்கி
கிடந்தாயடி

உன்னை காணாது
உன் மக்களின் மடி
காய
நெய்தல் பூமி வாடி
போக
உன்னை விடுவிக்க
பிச்சை கேட்டோமடி
கண்ணீர் மல்க...

வந்தாய் காவேரி
எங்கள் கண்ணீர்
துடைக்க
இருந்தும்
வாங்குகின்றோம் அடி
தமிழன் என்ற
ஒற்றை சொல்லுக்காக ,,!!

தாயே நாங்கள்
உன்னை உரிமம்
கோரவில்லை
நாங்களும்
உன் பிள்ளையாய்
நீ கொடுத்த
நீர் குடித்து
வளர்ந்தவர்கள்
என்பதை மறக்கவில்லை

உன்னை பிறந்த
வீட்டிலே அடைத்து வைத்து
உன் பிள்ளைகள்
ஆகிய எங்களை
அழவைப்பது
நியாயமா ???

தண்ணீருக்காக
கண்ணீருடன்

என்றும் ....என்றென்றும்...

எழுதியவர் : ஜீவன் (14-Sep-16, 5:08 am)
பார்வை : 103

மேலே