எழுதுகோலின் கவிதை

​எண்ணத்தை எழுதுவதே கவிதை
நயம்பட உரைப்பதே கவிதை
சுவைபட சொல்வதே கவிதை
பொருள்பட கூறுவதே கவிதை
அழகாய் வடித்திடுவதே கவிதை
அனைத்தையும் இணைப்பதே
இணைத்ததை செதுக்குவதே எழுதுகோல் ...!

நெஞ்சமதில் விளைவதை விதைத்திட
கொஞ்சுத் தமிழில் விருந்து படைத்திட
உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை
உள்ளமும் உருகிட வைக்கும் விதத்தில்
எழுதிட உதவிடும் ஆயுதம் எழுதுகோல் !

பேசியது எழுதுகோல் என்னிடம் ஒருநாள்
எழுதுபவர் என்னை தொழுதிட வேண்டாம் ...
உதவுகிறேன் நானும் நினைப்பதை எழுதிட
பொருளும் சேர்த்திட புகழும் பெற்றிட ....
இருந்தும் என்னிடம் பேசுவதும் இல்லை
நினைப்பதும் இல்லை நீதிதானா இதுவும் ..!

அளித்திட்ட தலைப்பால்
வடித்திட நினைத்தும்
முடித்திட கவிதையை
முனைப்புடன் தேடியே
முத்தான வார்த்தைளால்
சத்தான வரிகளாக்கி
பதிவும் செய்கின்றனர்
பட்டமும் பெறுகின்றனர் ....

பழனி குமார்

( கற்பனையாகத்தான் எழுதினேன்
குறையாக கொள்ள வேண்டாம்,
மாறுபட்ட சிந்தனையில் )


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Sep-16, 7:07 am)
பார்வை : 140

மேலே