எதில் சுகம்

பூத்திருப்பதில் ஒரு சுகம்
பூவிற்கு...!

காத்திருப்பதில் ஒரு சுகம்
பெண்ணிற்கு...!

பார்த்திருப்பதில் ஒரு சுகம்
ஆணிற்கு...!

சேர்ந்திருப்பதில் ஒரு சுகம்
உறவுக்கு....!

சார்ந்திருப்பதில் ஒரு சுகம்
உரிமைக்கு...!

ஆழ்ந்திருப்பதில் ஒரு சுகம்
சிந்தனைக்கு....!

ஆசைப்படுவதில் ஒரு சுகம்
வாழ்க்கைக்கு...!

அவதிப்படுவதில் ஒரு சுகம்
பிறர்நலனுக்கு....!

வாழ்வதில் ஒரு சுகம்
இருப்பவனுக்கு...!

வாழாதிருப்பதில் ஒரு சுகம்
மரிப்பவனுக்கு....!

வலிவந்தால் ஒரு சுகம்
கர்ப்பிணிக்கு....!

வழிபிறந்தால் ஒரு சுகம்
வறியவனுக்கு...!

எழுதியவர் : செல்வமணி (15-Sep-16, 12:04 am)
Tanglish : yethil sugam
பார்வை : 197

மேலே