நீ + நான் = காதல்

ஒற்றடம் தரும் பார்வையால்
உயிர் தடவி
குறும் புன்னகையால்
ஆயுள் நீட்டி
சொட்டுச் சொட்டாய்
தேநீர் வாழ்வை
தித்திக்கச் செய்கிறாய் - நீ

மனத்தின் பள்ளத்தாக்கில்
மழையென வந்து
இதயம் எங்கும் சில்லிடும்
உன் ஸ்பரிசத்தில்
நனைந்து கொண்டிருக்கிறேன் - நான்

உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
சேமித்து
காதலை செலவு செய்வோம்
வா!

எழுதியவர் : தென்றல் ராம்குமார் (15-Sep-16, 1:00 pm)
பார்வை : 67

மேலே