வண்டமிழ் இசையாக

பருவத்தின் வாயிலிலே பவளமென பளபளத்து
பசுந்தளிராய் நின்றேதான் இருந்தாள்
உருவத்தில் செழிப்பாக உதட்டினில் சிரிப்பாக
ஒளிர்கன்னமதில் நாணமுற்று சிவந்தாள்
கருங்குழலின் நெளிவினிலே கடலலையின் பதிப்பாக
காற்றினிலே அசைந்தாட நடந்தாள்
விருப்பமென விழிகாட்டி விரலதிலே சுதிமீட்டி
வண்டமிழ் இசையாக இணைந்தாள்!


பதநீரின் சுவையாக பழஞ்சாற்றின் அமுதாக
பூப்பந்தல் பஞ்சணையில் அணைத்தாள் !
இதழோடு தேன்சிந்த இமைவிழியும் கூத்தாட
பதமாக முத்தமொன்று அளித்தாள்
நதிநீரின் சுவையாக நறுந்தேனின் இனிப்பாக
நல்ரோஜாவின் பன்னீராய் தெளித்தாள்
விதவிதமாய் மொழிபேசி வெள்ளிவரை அணைத்தே
விருந்தாக இன்பமதைக் களித்தாள்

---கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (15-Sep-16, 12:53 pm)
பார்வை : 59

மேலே