திறமை எது?

உணர்வைக் கொல்வது திறமையா?
உள்ளம் கொல்வது திறமையா?
நன்றி மறப்பது திறமையா?
நாணயம் விலகுவது திறமையா?

கள்ளம் பேசுவது திறமையா?
கபடம் உரைப்பது திறமையா?
நன்மை செய்வது திறமையா?
நடத்தை நன்று திறமையா?

கடமை செய்வது திறமையா?
கால்பி டிப்பது திறமையா?
திறமை எது புரியவில்லை!
தெளிவாய் எதுவும் அறியவில்லை!

எழுதியவர் : கவிமகன் (29-Jun-11, 7:44 pm)
சேர்த்தது : கவிமகன்
பார்வை : 357

மேலே