காதல்

எப்படியும் நீ வருவாய்
என்று

உன் வரவுக்காக நான்
காத்திருக்க

பகல் பொழுதும் எனக்கு
துனையாய்

உன்னை கான ஆவல்
கொண்டு!

காத்திருந்து கலைத்து,பணி
முடித்து

பணி மாற்ற வந்த நண்பனை
எனக்கு

அறிமுகம் செய்து எனக்குதவும்
படி வேண்டிக் கொண்டு

துயரோடு விலகியது பகல்
பொழுது

உன்னை காணாமல்

நான் மட்டும் கலைப்பின்றி

உனைக்காணும் ஆவலில்
அதே இடத்தில்

அறிமுக நண்பனோ எனக்கு
வில்லனாகிப் போனான்

வெறுப்பாகிப் போனேன் எதையும்
பார்க்க விடாமல் தடுத்ததால்

இருட்டாக இருந்தது தான்
காரணமோ தெரியவில்லை

அவனால் எனக்கெந்தபயனும்
இல்லை ஆனாலும்

மாற்று வழி கண்டுபிடித்த

மக்களுக்கு நான் நன்றி
சொல்ல வேண்டும்

செயற்கையான பகலை
உருவாக்கி உள்ளார்கள்

எனக்கு உதவ!

விலகிப் போன வில்லனும்
சற்று தள்ளி

எனை கண்காணித்தபடியே

பொருட்படுத்தவில்லை நான்

என் விழிகள் முழுதும் உன் உருவம்
தாங்கி

உன் வரவுக்காக ஏங்கி

இமைக்க மறந்த

என் விழிகளின் தவிப்பை
என்ன சொல்ல

கொக்கின் தவமாய் என்
என்னங்கள்

"காத்திருத்தலில் " மணித்துளிகள்
தொலைந்தாலும்

ஓவ்வொரு நொடியும் புதிதாக
பிறக்கும்,

"எதிர்பார்ப்பும் "சுகம் தான்.
#sof #sekar

எழுதியவர் : #Sof #sekar (18-Sep-16, 11:06 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே