காதலி உலகிலேயே அழகாக இருந்தால்

உலகிலேயே
அழகான பெண்
வீட்டருகில் இருந்தால்
ஈக்களெல்லாம் பூக்களை
மொய்க்காது
இந்தப் பூவையின்
மெய்யில் இருந்திருக்கும்
பாக்களெல்லாம் குயிலிடம்
பிறக்காது
இந்தக் குயிலியிடம்
பிறந்திருக்கும்
மழை வரும் நேரத்தில்
மயில் ஆடாது
இந்த மங்கை வரும்
நேரத்தில் ஆடியிருக்கும்
சூரியன் கிழக்கிலிருந்து
உதிக்காது
இந்தக் காரிகை வீட்டு
கிணற்றிலிருந்து உதித்திருக்கும்
பூக்களெல்லாம் கொடியில்
பூக்காது
இவள் துணி காயும் கொடியில்
பூக்க ஆசைகொண்டிருக்கும்
மதியது இரவில்
வந்து
இந்தக் கோமதியின்
ரதி முகம் காணாது
இறந்துகொண்டிருக்கும்
தென்றல் காற்றாக வந்து
இந்த நயன் தாராவின்
உடல் தீண்டி
நயாகரா ஊற்றாக
சுரந்துகொண்டிருக்கும்
இவள் பாதம் படும்
இடமெல்லாம் புவிகூட
ஆசைகொண்டு தன்
ஈர்ப்புவிசையை கூட்டிக்கொண்டிருக்கும்
இவளைப் புகழ்ந்துபாடவே
தன் பெயரை கவி என சூட்டிக்கொண்டிருக்கும்
அவள் மிதிப்பதைக்கூட
மதிப்போடு தன்னுடலை
மிருதுவாக்கிக் காட்டிக்கொண்டிருக்கும்