என் அருமை அம்மா

விழி திறக்கும் முன் என் விழி திறக்கும் முன் முதல் முத்தம் கொடுத்தாய்....

ஒளி இரவென வெயில் மழை குளிரென கருவில் யுத்தம் புரிந்தாய்.....

உன் அன்பைப் பார்த்த பாறையிலும் அட காவிரி ஊறுதம்மா.....



நீ நிலவை அழைக்க சோறு தொண்டையிலே இறங்குதம்மா...

வராத அந்த நிலவுக்கு இரவில் உறங்காத 
தண்டனையாம்மா.....

முத்தாக மாற சிற்பியும் கொத்தாகப் பூக்க குறிஞ்சியும் உன் காலடி தேடுதம்மா......

(விழி திறக்...)

சமைத்த உணவில் கொஞ்சம் அதிகம் கேட்டால் போதுமம்மா.....
உன் ஆனந்தம் காண கடலாழம் கொண்ட கருவிழி வேண்டுமம்மா....

உன் சுவாசத்தில் மலர்ந்து நான் செழிக்க, 
நீ வேண்டும் கடவுள் பலவே அம்மா....

நுறு ஐென்மம் வேண்டும் உன் மடி உறங்க,
நான் வேண்டும் கடவுள் நீயே அம்மா....

விழி திறந்த பின் கண் விழி திறந்த பின்
கனவுகள் நுறு கண்டாயே...

விழி முற்றும் முன் கண் விழி முற்றும் முன் 
நனவாய் அனைத்தையும் காண்பாயே....

          _ச.ஐார்ஐ் ராஜரத்தினம் 

எழுதியவர் : ஐார்ஐ் (19-Sep-16, 7:11 pm)
Tanglish : en arumai amma
பார்வை : 709

மேலே