காவியக் காதல்...

சோகம் என்னும் ஆழ்க்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் இன்று நீ இல்லாமல்...
கண் இமைக்கும் பொழுதில் என் இதயத்தை ஆயிரம் துண்டுகளாக சிதறடித்து மண்ணுக்குள் சென்றது ஏனடி...?
உயிரற்ற இதயத்தோடு ஒரு நடைபிணமாய் வாழ்கிறேன் நானடி...
சோகம் நிறைந்த என் வாழ்க்கை இவ்வளவு நீளமாகவா இருக்க வேண்டும்...
என் நினைவை இழந்து உன் நினைவோடு வாழ்கிறேன் இன்று...
நான் உன்னோடு மண்ணுக்குள் சேர்வது என்று?
காலத்தின் பதிலுக்காக காத்திருக்கும் உன் காதலன்...
தேகத்தை அழிக்கும் இந்த இயற்கையால் நம் "காவியக் காதலை" என்றும் அழிக்க முடியாது...